பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு

Updated : ஜூன் 20, 2020 | Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

கோவை: கோவையில் இன்றும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
கோவை, சின்னியம்பாளையம் அடுத்த மயிலம்பட்டியை சேர்ந்த 31 மற்றும் 58 வயது பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தவர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கோவை, சவுரிபாளையம் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு தொற்று கண்டறியப்பட்டது.



latest tamil news




அரக்கோணத்தில் இருந்து ரயில் மூலம் வந்த பொள்ளாச்சி சின்னியம்பாளையத்தை சேர்ந்த 32 வயது பெண், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உறவினரின் இறுதி சடங்கில் பங்கேற்று கோவை திரும்பிய, காந்திபுரத்தை சேர்ந்த 41 மற்றும் 54 வயது ஆண்களுக்கு தொற்று இருப்பது தெரியவந்தது.
மேலும், தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த 60 வயது முதியவர், ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு சிகிச்சைக்கு வந்த ராஜவீதியை சேர்ந்த 24 வயது ஆண், பெரிய கடை வீதியை சேர்ந்த 18 வயது பெண், மற்றும் அன்னுாரை சேரந்த 25 வயது போலீஸ் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதன் மூலம் கோவையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 255 ஆக உயர்ந்துள்ளது. இன்று இருவர் கொரோனா பாதிப்பிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


latest tamil news





எங்கும் செல்லாம் 23% பாதிப்பு!


'கோவையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில், ஆண்கள் 43.7 சதவீதம், பெண்கள் 56.3 சதவீதமாகும். ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்ட பகுதியில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16.1 சதவீதம், வெளிமாட்டங்களில் இருந்து வந்து தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 29.9 சதவீதம், வெளிமாவட்டங்கள் செல்லாமல் கோவையிலேயே வசித்து தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 23 சதவீதம், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருடன் நேரடி தொடர்பில் இருந்து பாசிட்டிவ் ஆனவர்கள் 31 சதவீதம் பேர்' என, சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X