பொது செய்தி

இந்தியா

லடாக் விவகாரம் மோடி உரையை நீக்கிய சீன இணையதளங்கள்

Updated : ஜூன் 20, 2020 | Added : ஜூன் 20, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

பீஜிங்: எல்லை நெருக்கடி குறித்து பிரதமர் மோடியின் உரை மற்றும் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளரின் உரையை சீன இணைய தளங்கள் நீக்கி உள்ளதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.latest tamil newsசீனாவில் இருந்து வெய்போ உள்ளிட்ட இரண்டு இணைய தளங்கள் செயல்படுகின்றன. டுவிட்டரை போன்று உள்ள வெய்போவிற்கு மில்லயின் கணக்கான பயனாளர்கள் உள்ளனர். பிரதமர் மோடிகடந்த2015 ம் ஆண்டு சீனாவிற்கு சென்றிருந்த போது சீன மக்களுடன் தொடர்பு கொள்வதற்காக வெய்போவில் கணக்கை துவக்கி இருந்தார்.

லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15-ம் தேதி(திங்கள்கிழமை) சீன ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் கர்னல் உட்பட 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதனை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கு மோதலில் கொல்லப்பட்ட இந்திய வீரர்களின் தியாகம் வீணாகாது என்பதை வலியுறுத்திய மோடி, இந்தியா அமைதியை விரும்புகிறது, ஆனால் தூண்டப்பட்டால் பொருத்தமான பதிலைக் கொடுக்கும் திறன் கொண்டது என்று கூறி இருந்தார். பிரதமரின் இந்த உரையை வெய்போ தனது பக்கத்தில் இருந்து நீக்கி உள்ளது.


latest tamil newsமேலும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா சீனா, அதன் நடவடிக்கைகளை உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டிற்குஉட்பட்ட பக்கத்திலேயே நடத்தி கொள்ள வேண்டும். , அதை மாற்றுவதற்கு ஒருதலைப்பட்ச நடவடிக்கை எடுக்கக்கூடாது. என கூறி இருந்தார். அனுராக் ஸ்ரீவாஸ்தவாவின் இந்த கருத்துக்களும் நீக்கப்பட்டு இருப்பதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
21-ஜூன்-202004:28:30 IST Report Abuse
J.V. Iyer இங்கு கருத்து சுதந்திரம் அதிகம் கொடுக்கப்பட்டதால், நிறைய தேச துரோகிகள் பாக்கிகள், சீன்னாவின் பக்கம் பேத்துகிறார்கள். இந்தியாவிலும் ஊடகங்களினால் உண்மைகள் திரிக்கப்படுகின்றன. ஆனால் சீனாவில் உண்மைகள் மறைக்கப்படுகின்றன. இரண்டு நாடுகளிலும் உண்மைகள் நாட்டு மக்களை எட்டுவதில்லை.
Rate this:
Ray - Chennai,இந்தியா
21-ஜூன்-202010:01:10 IST Report Abuse
Rayஉண்மைகள் நாட்டு மக்களை எட்டுவதில்லை. - golden words truth slipped out...
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஜூன்-202022:02:41 IST Report Abuse
Janarthanan சீனா அவங்க மக்களை இப்படி தான் ஏமாற்றி வைத்து உள்ளார்கள் உலகத்தில் யாரு சீனாவை எதிர்த்து பேசினாலும் அது வெளியாகாது அங்கு ??? அவங்களுக்கு உலகம் சீனாவிற்கு அடிமை போல் ஒரு மாயையை உருவாக்கி வைத்துள்ளது
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
20-ஜூன்-202021:34:05 IST Report Abuse
A.George Alphonse இது கல்யாணத்தை நிறுத்த சீப்பை ஒளித்து வைத்த கதை போல் இருக்கிறது. இதுபோன்ற கேவலமான நிகழ்வுகளை சீனா நடத்துவதன் மூலம் நமது நாட்டின் கோபத்தையோ,போர்தொடுக்கும் முடிவையே மாற்றமுடியாது.இதுபோன்ற கேவலமான,கீழ்த்தரமான நிகழ்வுகள் மூலம் சீனாக்காரன் அவன் தலையிலேயே மண்ணை வாரி கொட்டிக்கொள்கிறான்.
Rate this:
Anandan - chennai,இந்தியா
21-ஜூன்-202002:37:04 IST Report Abuse
Anandancheena yoசீனா எல்லோரையும் வந்து பார் என்கிறான். இன்னும் சிறிது காலத்தில் பல முக்கிய நாடுகள் சீனாவிற்கு எதிராக திரும்பப்போகிறது, இப்போதே பலநாடுகள் ஆரம்பித்துவிட்டன. அவர்களின் பொருளாதாரத்தில் கைவைத்தால் அவன் அடங்கிவிடுவான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X