சீனாவில் இரண்டாவது அலை வீசும் கொரோனா: புதிதாக 34 பேருக்கு தொற்று உறுதி

Updated : ஜூன் 20, 2020 | Added : ஜூன் 20, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

பீஜிங்: சீனாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 34 பேருக்கு கொரோனா உறுதியானது.

சீனாவில் முதன் முதலாக பரவிய கொரோனா இன்றளவும் உலக நாடுகளை கலங்கடித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக சீனாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா தற்போது மீண்டும் பரவத் துவங்கி உள்ளது. இதனால் சீனர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.



latest tamil news



சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள ஜின்ஃபாடி சந்தையில் முதன்முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து அச்சந்தை மூடப்பட்டது. மற்றும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பல பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

புதிதாக தொற்று ஏற்பட்ட 34 பேர்களில் 22 பேர் தலைநகரைச் சேர்ந்தவர்கள் அவர்களில் 7 பேருக்கு கொரோனாவுக்கான அறிகுறி எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது


latest tamil news



சீனாவில் இரண்டாவது அலையாக கொரோனா பரவி வருவதால் தலைநகர் பீஜிங்கில் அவசரநிலை பிகடனப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டு போக்குவரத்து முடங்கி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஜூன்-202007:10:12 IST Report Abuse
தமிழ் ஆக்கிரமிப்புவெறிபிடித்து அலையும் சீனாவுக்கு கொரோனா மாதிரியான நோய்கள் தான் தகுந்த பாடம் கற்பிக்கவேண்டும்.
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
21-ஜூன்-202006:21:41 IST Report Abuse
NicoleThomson நம்மூரில் சுனாமியே அடிச்சுட்டு இருக்கு இதில் இப்படி ஒரு செய்தியா?
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
20-ஜூன்-202021:29:09 IST Report Abuse
sundarsvpr சீனா இப்பொது எதிரி நாடு. கொரோனா இரண்டாவது அலை வரிசைக்கு இந்தியா காரணம் என்று சீனா உலக நாடுகளைடைய பரப்பினாலும் ஆச்சரியம் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X