பிரிட்டனில் கொரோனா ; தெற்காசிய மக்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு

Updated : ஜூன் 20, 2020 | Added : ஜூன் 20, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

லண்டன் : அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு பிரிட்டனில் உள்ள மருத்துவ மனைகளில் தெற்காசியாவை சேர்ந்த மக்கள் அதிகம் பாதிக்கப்படவும், பலியாகவும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. நோய் பாதிப்பு அதிகமான நாடுகளில் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா தாண்டவம் ஆடி பாதிப்புகளை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பிரிட்டனில் கொரோனா பாதிப்பினால் மற்றவர்களை விட தெற்காசியாவை சேர்ந்த மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக புதிய ஆய்வறிக்கை காட்டுகிறது. ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய 8 நாடுகள் தெற்காசிய நாடுகளாகும்.


latest tamil news



எடின்பர்க் பல்கலை ஆய்வில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஒவ்வொரு 1000 வெள்ளையின மக்களில் 290 பேர் பலியாகின்றனர் என தெரியவந்தது. அதேசமயம், ஒவ்வொரு 1000 தெற்காசிய மக்களில் 350 பேர் பலியாகின்றனர் என தெரியவந்தது. மேலும் தெற்காசிய மக்களின், இறப்பு விகிதமும், தொற்று விகிதமும் சற்று அதிகமாகவே உள்ளது ஆய்வில் தெரியவந்தது. பிரிட்டனில் உள்ள தெற்காசியாவை சேர்ந்த நோயாளிகளில் சுமார் 40 சதவீதம் பேர் நீரிழிவு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனாலேயே ஆசிய இனத்தவர்களின் கொரோனா தொற்றும், இறப்பு வீதமும் அதிகரிக்கின்றது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
21-ஜூன்-202008:46:00 IST Report Abuse
Chandramoulli இன்னமும் இவர்களுக்கு நிறவெறி அடங்கவில்லை.
Rate this:
Cancel
JG Muthuraj - bangalore,இந்தியா
21-ஜூன்-202007:42:17 IST Report Abuse
JG Muthuraj புள்ளி விவரத்தில் சிறிய வேறுபாடு தான் தெரிகிறது. அதை அழுத்த வேண்டுமா? மற்ற நாடுகளின் நிலைமைகளையும் ஒப்பிட வேண்டும். பிரிட்டனில் எல்லோருக்கும் சமமான மருத்துவசிகிட்சை கிடைக்கிறதா? என்ற சிறு கேள்வியும் எழுகிறது . கிழக்கு ஆசிய மக்கள் தான் நமக்கு பாரமானவர்கள் என்று நினைப்பவர்களுக்கு தான் இந்த புள்ளிவிவரம் தேவை.
Rate this:
Cancel
Nimalakumar Balasingam - Middelfart,டென்மார்க்
20-ஜூன்-202022:46:55 IST Report Abuse
Nimalakumar Balasingam உலகம் முழுவதும் விகிதாசாரம் பார்த்தால் வெள்ளையின மக்களே அதிகம்
Rate this:
aryajaffna - Zurich,சுவிட்சர்லாந்து
21-ஜூன்-202008:33:16 IST Report Abuse
aryajaffnaமற்றையவர்களை சிலுவை போர் என்று கொன்று அவர்களின் கலாசார அடையாளங்களை அழித்து விடடடார்கள், மஹாத்மா காந்தியின் புண்ணியத்தில் இந்தியா , இலங்கை காப்பாற்ற படைத்து, ஆனால் இப்போ சிலர் அதை அழிக்க துணை போகின்றனர்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X