பொது செய்தி

இந்தியா

கல்வான் பள்ளத்தாக்கு முழுவதையும் சொந்தம் கொண்டாடும் சீனா

Updated : ஜூன் 20, 2020 | Added : ஜூன் 20, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
China, claim, Galwan Valley, entire, india-china border, eastern ladakh, border clash, india, கல்வான் பள்ளத்தாக்கு, சீனா

புதுடில்லி: லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாட முயற்சி செய்கிறது. இதற்காக வரலாற்று ஆதாரங்களை காட்டி சீன நிபுணர் ஒருவர் உரிமை கோரியுள்ளார்.

கல்வான் மற்றும் ஷ்யோக் நதிகள் சங்கமிக்கும் இடம் வரை தங்களுடையது என சீனா சொந்தம் கொண்டாடுகிறது. இந்நிலையில், சீனாவை சேர்ந்த எல்லைகள் விவகார நிபுணர் ஸாங் யோங்பான் என்பவர், வரலாற்று ஆதாரங்களைக் காட்டி ஒட்டுமொத்த கல்வான் பகுதியும் சீனாவுக்குரியதே என்று குளோபல் டைம்ஸில் பேட்டியளித்துள்ளார்.


latest tamil news



மேலும் ஷ்யோக் நதிப்பகுதியில், இந்திய கட்டுமானங்கள் உள்ள பகுதிகளையும், சீனாவுக்கு சொந்தம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், அங்குள்ள விமான நிலையம், பாலம், சாலைகள் அமைத்துள்ள பகுதியில் சீனாவுக்கு சொந்தம் என கூறியுள்ளார். இது தொடர்பாக குவிங் பேரரசு (1644-1911) கால ஆதாரங்களையும், இலக்கியங்களையும் ஆதாரமாக காட்டியுள்ளார்.


latest tamil news


ஆனால் இதனை இந்திய வெளியுறவு அமைச்சகம் ஆதாரமற்றது எனக்கூறி மறுப்பு தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
21-ஜூன்-202010:59:55 IST Report Abuse
Chandramoulli சீனா கோவிட் 19 பரவலில் அமெரிக்காவின் குற்றசாட்டை மறைக்க உலக நாடுகளின் எதிர்ப்பை திசை திருப்ப , எல்லை பிரச்சனையில் இந்தியாவுடன் மோதுகிறது. தேவை இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்து உள்ளது . போர் வராமல் இருக்க மற்ற நாடுகள் சமாதானம் செய்ய வரும் வரை இந்த கோவிட் 19 பற்றி யாரும் விவாதிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் உள்ளது . ஆனால் நிலைமை இப்படி மறுபடியும் நம்மை திரும்ப தாக்கும் என்று சீனா நினைக்கவில்லை . எல்லையில் இந்தியாவின் அணுகுமுறை வேறுமாதிரி உள்ளது . உலக நாடுகள் இந்தியா பக்கம் இருக்கிறார்கள் என்பதை சீனா வால் ஜீரணிக்க முடியவில்லை .
Rate this:
Cancel
Lakshmipathi S - Bangalore,இந்தியா
21-ஜூன்-202008:41:57 IST Report Abuse
Lakshmipathi S சீன உலகம் முழுக்க கொரனவை பரப்பி தனது வியாபாரத்தை தக்கவைத்துக்கொள்ள நாடகமாடி வருகிறது .இதற்கு நமது மூத்த அரசியல்வாதிகள் வக்காலத்து வாங்கிவருவது அவமானம்.
Rate this:
Cancel
Sukumar Talpady - Mangalore ,இந்தியா
21-ஜூன்-202008:30:52 IST Report Abuse
Sukumar Talpady இலக்கியங்களையும் , சரித்திர சான்றுகளையும் நம்பாதவர்கள் சீன கம்யூனிஸ்ட்கள் . இப்பொழுது மட்டும் அவர்களுக்கு சரித்திரம் வேண்டுமா ? உலகத்திலேயே நம்பிக்கை வைக்க முடியாத நாடு ஒன்று இருக்கிறதென்றால் அது சீனா தான் . நம்ப வைத்து முதுகில் குத்துவது அதற்கு கைவந்த கலை. இந்த சீனாவின் உரிமைக்கு ஆதரவு தெரிவிக்க நம் நாட்டில் நிறைய பேர்கள் இருப்பார்களே ஏனென்றால் திரு மோடிக்கு சங்கடம் என்றால் அவர்களுக்கு சந்தோசம் . அப்படிப்பட்ட "தேச பக்தர்கள் " இவர்கள் . இவர்களுடைய குரல் இன்னும் கேட்க வில்லை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X