ராஜ்யசபா தேர்தலில் ஓட்டளித்த ம.பி., பா.ஜ., எம்.எல்.ஏ.,வுக்கு கொரோனா

Updated : ஜூன் 21, 2020 | Added : ஜூன் 20, 2020
Share
Advertisement
MLA,BJP,corona virus, voting, rajya sabha,polls, பாஜ, எம்எல்ஏ, கொரோனா, ராஜ்யசபா

போபால்: ம.பி.,யில் பா.ஜ., எம்.எல்.ஏ., ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ராஜ்யசபா தேர்தலில் அவர் ஓட்டளித்தால், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் பலரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

ம.பி., மாநிலத்தில், ஜாவாத் தொகுதி பா.ஜ., எம்.எல்.ஏ., ஓம்பிரகாஷ் சக்லேச்சாவுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரது மனைவிக்கும் கொரோனா உறுதியானது.


latest tamil news



இந்நிலையில், நேற்று ம.பி.,யில் 3 ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கு நடந்த தேர்தலில், கொரோனா பாதிப்புக்குள்ளான எம்.எல்.ஏ.,வும் ஓட்டளித்திருந்தார். இதனையடுத்து ம.பி.,யில் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டளிக்க வந்த எம்.எல்.ஏ.,க்கள் பலரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X