மஹா.,வில் 48 மணிநேரத்தில் 140 போலீசாருக்கு கொரோனா

Updated : ஜூன் 20, 2020 | Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

மும்பை : மஹாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கடந்த 48 மணிநேரத்தில் 140 போலீசாருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்புகள் அதிகரித்து வரும் மாநிலங்களில் மஹா.,முன்னிலையில் உள்ளது. மாநிலத்தில் கொரோனா தடுப்பு பணியில் களத்தில் பணியாற்றி வரும் போலீசார் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் மஹா.,வில் கடந்த 48 மணிநேரத்தில் 140 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் உறுதியானது. மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்ட போலீசாரின் மொத்த எண்ணிக்கை 3,690 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்கள் 46 பேர் ஆவர்.


latest tamil news



பாதிக்கப்பட்ட போலீசார் மும்பையில் உள்ள கிங் எட்வர்டு நினைவு மருத்துவமனையில் 10 நாட்களாக சிகிச்சையில் இருந்தனர். மும்பை போலீசாரில் மொத்தமாக 2,349 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டது. இதுவரை 31 பேர் பலியாகினர். மஹா.,வில் நேற்று 3,827 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதனால் பாதிப்புகளின் எண்ணிக்கை 1,24,331 ஆகஉயர்ந்தது. கொரோனாவால் 142 பேர் பலியாகினர். பலியானவர்களின் எண்ணிக்கையை 5,893 ஆக உயர்த்தியது. கடந்த 24 மணிநேரத்தில் 1,264 பேர் பாதிக்கப்பட்டதால் மும்பையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கையை 64,139 ஆக உயர்த்தியது.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X