வங்கதேச முன்னாள் கேப்டன் மொர்டாசாவுக்கு கொரோனா

Updated : ஜூன் 20, 2020 | Added : ஜூன் 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Mashrafe Mortaza, Bangladesh, Cricketers, Coronavirus

டாக்கா: வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஷ்ரப் மொர்டசா, நஷ்முல் இஸ்லாம், நபீஸ் இக்பால் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. வங்கதேசத்தில் இதுவரை ஒரு லட்சத்தி 8 ஆயிரம் பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 1,425 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், கொரோனா அறிகுறிகள் தென்பட்ட, வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மொர்டஷாவுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. வங்க தேச அணிக்காக அவர், 36 டெஸ்ட், 220 ஒருநாள், 54 டுவென்டி 20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.


latest tamil news



இதே போல் கிரிக்கெட் வீரர்கள் நபீஸ் இக்பால், நஷ்முல் இஸ்லாமுக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. கிரிக்கெட் வீரர் தமிம் இக்பாலின் சகோதரர் தான் நபீஸ் இக்பால் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
21-ஜூன்-202006:23:53 IST Report Abuse
NicoleThomson GetWellSoon
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X