பொது செய்தி

தமிழ்நாடு

நயன்தாரா, விக்னேஷ்சிவன், மிஷ்கினுக்கு கொரோனா?

Updated : ஜூன் 21, 2020 | Added : ஜூன் 21, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை : நடிகை நயன்தாரா உள்ளிட்ட திரையுலகினர் சிலர், கொரோனா அறிகுறியால், தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கொரோனாவின் ருத்ரதாண்டவம், சென்னையை புரட்டி எடுத்து வருகிறது. இதில், கோலிவுட்டின் மையமான கோடம்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி சுற்றுவட்டார பகுதிகளில், பாதிப்பு அதிகமாக உள்ளது.இந்நிலையில், தமிழ் திரையுலகில் இயக்குனர்கள் மிஷ்கின்,
nayanthara, vignesh shivan, mysskin, corona virus, நயன்தாரா, விக்னேஷ்சிவன், மிஷ்கின், கொரோனா

சென்னை : நடிகை நயன்தாரா உள்ளிட்ட திரையுலகினர் சிலர், கொரோனா அறிகுறியால், தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவின் ருத்ரதாண்டவம், சென்னையை புரட்டி எடுத்து வருகிறது. இதில், கோலிவுட்டின் மையமான கோடம்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி சுற்றுவட்டார பகுதிகளில், பாதிப்பு அதிகமாக உள்ளது.

இந்நிலையில், தமிழ் திரையுலகில் இயக்குனர்கள் மிஷ்கின், விக்னேஷ்சிவன், நடிகை நயன்தாரா போன்ற சிலர், கொரோனா அறிகுறியால், தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


latest tamil newsஇதற்கு முன் இயக்குனர் பாரதிராஜா, நடிகை ஸ்ருதிஹாசன், கமல் உள்ளிட்டோர் பாதுகாப்பு கருதி, தங்களை தாங்களே தனிமைப்படுத்தினர். எழும்பூரில் தனிமையில் இருப்பதாக கூறப்படும், நயன்தாரா சமீபத்தில் தான், 'மூக்குத்தி அம்மன்' படத்தில் நடித்து முடித்திருந்தார்.

சமீபத்தில் மறைந்த, ஏ.எல்.ராகவனும், முதலில் மாரடைப்பால் இறந்ததாக கூறினர். பின், கொரோனா தொற்று இருந்ததாக, இரவு தெரிவித்தனர். அவரது மனைவி எம்.என்.ராஜத்திற்கும், கொரோனா தொற்று உறுதியாகி, சிகிச்சை பெற்று வருகிறார்.

அதேபோல, இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் சமீபத்தில் பதிவிட்ட, 'வாட்ஸ்- ஆப்' பதிவில், 'நிறைய பேர் கொரோனா தொற்றால் பாதித்து, பல லட்சம் ரூபாய் செலவழித்து, சிகிச்சை பெறுகின்றனர். இல்லாதவர்களின் நிலை சிரமமாக உள்ளது. அதனால், அனைவரும் பாதுகாப்போடு இருங்கள். கொரோனாவை விட, தனிமையே நம்மை கொன்று விடும்' என, கூறியிருந்தார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஜூன்-202011:32:55 IST Report Abuse
theruvasagan கொரோனாவால சினிமாவும் கிரிக்கெட்டும் பாதிப்பு அடைந்தால் நாட்டுக்கு நல்லதுதான். பல்லாயிரம் கோடிகளை வெத்து பொழுதுபோக்குக்காக செலவிட்டு சில பேர்களை அவர்களுடைய திறமைக்கும் உழைப்புக்கும் சற்றும் பொருத்தமில்லாத வகையில் அவர்களை கோடீஸ்வரர்களாக்கும் அறிவீனம் மட்டுப்படும்.
Rate this:
Cancel
Young Prince - Bangalore,இந்தியா
21-ஜூன்-202010:57:14 IST Report Abuse
Young Prince நயன் குணம் அடைய பிராத்திப்போம்.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
21-ஜூன்-202010:49:51 IST Report Abuse
A.George Alphonse இவர்கள் என்ன ஆகாயத்தில் இருந்து குதித்தவர்களா?அவர்களும் மனிதர்களே. காரோண யாரையும் விடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X