சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

புதுவித முக கவசம்!

Added : ஜூன் 21, 2020
Share
Advertisement
புதுவித முக கவசம்!

நாளுக்கு நாள் கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, வெளியே செல்லும்போது முக கவசம் அணிவதன் அவசியத்தை இப்போது பெரும்பாலானோர் உணர்ந்து உள்ளனர்.
முக கவசங்களில், 'என்.95' முக கவசத்திற்கு கொரோனா தொற்றை நன்கு தடுக்கும். ஆனால், இந்த கவசத்தை தினமும் மாற்ற வேண்டும். இதை தவிர்க்க, சவுதி அரேபியாவில் உள்ள மன்னர் அப்துல்லா அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஒரு புதுமையை கண்டுபிடித்துள்ளனர்.
பாலிமைடு என்ற பொருளால் ஆன, ஒரு மெல்லிய படலத்தையும், நேனோ துளைகள் கொண்ட சிலிக்கன் படலத்தையும் ஒன்றிணைத்து, அதில், சுவாசிப்பதற்கு சிறிய துளைகளை இட்டு, ஒரு காகிதம் போன்ற அமைப்பை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இந்த காகிதத்தை என்.95 முக கவசத்தின் வெளிப்புறத்தில் ஒட்டிவிட முடியும். தினமும் பயன்படுத்தி முடித்ததும், ஒட்டப்பட்ட காகிதத்தை எடுத்து குப்பை தொட்டியில் பத்திரமாக போட்டுவிடலாம். மறுபடியும் புதிய பாலிமைடு-சிலிக்கன் காகிதத்தை ஒட்டிக்கொண்டு என். 95 கவசத்தை பயன்படுத்தலாம். இதன் மூலம் புதிய கவசத்தை வாங்கும் செலவு மிச்சமாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X