அரசியல் செய்தி

தமிழ்நாடு

கடவுள் மீது குற்றம்சாட்ட முயற்சி: முதல்வருக்கு ஸ்டாலின் கண்டனம்

Updated : ஜூன் 21, 2020 | Added : ஜூன் 21, 2020 | கருத்துகள் (98)
Share
Advertisement
DMK, MK Stalin, Stalin, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu, தி.மு.க,ஸ்டாலின், கொரோனா, கொரோனாவைரஸ், திமுக தலைவர் ஸ்டாலின், மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் இபிஎஸ்,  அமைச்சர் அன்பழகன்,

சென்னை: கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் மீது பழி சுமத்திய அரசு தற்போது கடவுள் மீது பழியை சுமத்த முயற்சிக்கிறது என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்கு தான் தெரியும் என முதல்வர் கூறியது கண்டிக்கத்தக்கது. முதலில், மக்கள் மீது பழி சுமத்திய அரசு, தற்போது கடவுள் மீது பழியை சுமத்த முயற்சிக்கிறது. குளறுபடிக்கு மேல் குளறுபடி, குழப்பத்திற்கு மேல் குழப்பம், குற்றத்திற்கு மேல் குற்றத்தை அரசு செய்கிறது.

அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா என்ற செய்தியை அவரிடம் உறுதிபடுத்திய பிறகே, டுவிட்டரில் பதிவிட்டேன். அமைச்சருக்கு கொரோனா என மத்திய அமைச்சரும் டுவிட் செய்ததற்கு முதல்வர் என்ன பதில் சொல்ல போகிறார்.அமைச்சருக்கு தொற்றில்லை எனில் மகிழ்ச்சியே. ஆனால், முதல்வர் அதை மறைக்கிறார்.


latest tamil news
கொரோனா மறைந்தது என்ற செய்திதான் முதல்வருக்கு நல்ல பெயர் வாங்கி தரும். கொரோனாவை மறைப்பதோ, எண்ணிக்கையை குறைப்பதோ முதல்வருக்கு நல்ல பெயர் வாங்கி தராது. மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சொல்வதை கேட்டு பரிசீலித்து கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குங்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (98)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
21-ஜூன்-202021:59:14 IST Report Abuse
Girija இறைவன் இருக்கிறான், சுடலை சொல்கிறான், உளறி மாட்டிகிட்டான்
Rate this:
Cancel
Kadaparai Mani - chennai,இந்தியா
21-ஜூன்-202021:54:47 IST Report Abuse
Kadaparai Mani யாரோ ஒரு ஆள் அவனுக்கு கோடி . மட்டமான அறிக்கை எழுதி கொடுக்கிறான் .யாரவது தமிழருக்கு அந்த வாய்ப்பை கொடுங்கள் சுடலை அவர்களே .எவ்வளவு படித்தவர்கள் தமிழ் நாட்டில் உள்ளனர் .அந்த பீகார் ஆளிடம் பணத்தை திரும்பி வாங்குங்கள் .
Rate this:
Cancel
Dr.T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
21-ஜூன்-202021:45:50 IST Report Abuse
Dr.T.Senthilsigamani கடவுள் மீது குற்றம்சாட்ட முயற்சி: முதல்வருக்கு ஸ்டாலின் கண்டனம் - அடேங்கப்பா - ஸ்டாலினின் வாதம் புல்லரிக்கவைக்கிறது .வாழ்நாள் முழுவதும் ஹிந்து கடவுள் விரோத போக்கை கடைபிடித்தவர் கருணாநிதி தான் .மேலும் ஒரு உண்மை சம்பவம் 2006ம் ஆண்டு, அக்டோபர் மாதம் சன் டிவியில் நேருக்குநேர் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது .அதில் பலப்பல கேள்விகளுக்கு கலைஞர் பதில் அளித்தார்.அப்போது ஒருவர்,கலைஞர் கருணாநிதியிடம் ''உங்களுடைய இத்தனை ஆண்டு வாழ்க்கையில் என்றைக்காவது ஒரு கணம் , ஒரு நிமிடம் கடவுள் இருந்தாலும் இருப்பார்னு எப்பவாவது உங்களுக்கு மனதில் தோன்றியிருக்கிறதா?,'' என்று கேட்டார்.அதற்கு கலைஞர் கருணாநிதி ,''என் வாழ்க்கையில் அந்த கணம் குறுக்கே வராததற்கு கூட அந்தக் கடவுள் தான் காரணம் என இருக்கலாமோ ? இல்லையோ எனக்கு தெரியவில்லை,'' என நக்கலாக பதில் அளித்தார். உடனே யாவரும் அய்யகோ அய்யகோ அய்யகோ கருணாநிதி கடவுள் மீது குற்றம் சாட்டிவிட்டார் என வானத்திற்கும் பூமிக்கும் ஸ்டாலின் போன்று தாவி குதிக்கவில்லை.தெரியாத விஷயங்களை கடவுளுக்கு தான் வெளிச்சம் என சொல்வது பழைய மரபு .அதை தான் தமிழக முதல்வர் சொல்லியிருக்கிறார் . தவறில்லை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X