பொது செய்தி

இந்தியா

சீனாவிற்கு பதிலடி கொடுக்க, ராணுவத்திற்கு முழு சுதந்திரம்: ராஜ்நாத் சிங்

Updated : ஜூன் 21, 2020 | Added : ஜூன் 21, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
Rajnath Singh, Ladakh, Border Issue, armed forces, defence minister, indian army, soldiers, eastern ladakh, ladakh, galwan valley, china, border issue, ராஜ்நாத் சிங், லடாக், பதிலடி, சீனா, இந்தியா, ராணுவம்

புதுடில்லி: லடாக் எல்லையில் சீனா அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்கியதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், கல்வான் பள்ளத்தாக்கு முழுவதும் தங்களின் பகுதி என சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கிடையே, இரண்டாம் உலகப் போரில் ரஷியா வெற்றி பெற்றதன் 75ம் ஆண்டு வெற்றி தினம் ஜூன் 24ல் மாஸ்கோவில் கொண்டாடப்படுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள்கள் அரசுப் பயணமாக நாளை மாஸ்கோ புறப்படுகிறார்.


latest tamil news


அதற்கு முன்னதாக முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படைகளின் தளபதிகளுடன் லடாக் எல்லை பிரச்னை தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது ராஜ்நாத் சிங் கூறுகையில், ‛எல்லையில் இந்திய படைகள் தயார் நிலையில் உள்ளன. லடாக் எல்லையில் சீனா அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்க இந்தியப் படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. சீனப் படைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்குமாறு ராணுவ உயரதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
22-ஜூன்-202010:27:54 IST Report Abuse
M S RAGHUNATHAN Let Congress publish unedited version of agreement signed by Rahul, the then Congress President and Xi Peng the then communist party of China chairman in 2008. Pl let all Congress supporters demand the details of agreement.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
21-ஜூன்-202021:49:01 IST Report Abuse
தல புராணம் அமெரிக்க கழுகு, சீன டிராகன், ரஷிய கரடி - Choose your devil.
Rate this:
Cancel
21-ஜூன்-202021:44:43 IST Report Abuse
tata sumo 20 perula ethana peru unga alunga malik raja unga, amaithi margam ethana peru solunga pappom malik raja
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X