பொது செய்தி

இந்தியா

பிளாஸ்மா சிகிச்சையால் டில்லி அமைச்சரின் உடல்நிலையில் முன்னேற்றம்

Updated : ஜூன் 21, 2020 | Added : ஜூன் 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Delhi, Health Minister, Satyendar Jain, Getting Better, General Ward, Monday, Delhi health minister, Satyendar Jain, plasma therapy, health condition, health, coronavirus, corona, covid-19, coronavirus outbreak, covid-19 pandemic,  டில்லி, சுகாதாரத்துறை, அமைச்சர், சத்யேந்தர்ஜெயின், கொரோனா, உடல்நிலை, முன்னேற்றம்,

புதுடில்லி: கொரோனா தொற்று ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் ஆக்சிஜன் உதவியுடன் சுவாசித்த வந்த டில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் உடல்நிலை தற்போது தேறியுள்ளது. இதனால் நாளை (ஜூன் 22) அவர் பொது வார்டுக்கு மாற்றப்பட உள்ளார்.

55 வயதாகும் டில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னின்று செயல்படுத்தி வந்தார். இந்நிலையில் அவருக்கு கடந்த ஜூன் 17ல் அவருக்கு கடும் காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ராஜிவ் காந்தி அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனைத் தொடர்ந்து 19ம் தேதி டில்லியில் பிரபலமான மேக்ஸ் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு எடுக்கப்பட்ட சி.டி.ஸ்கேன் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்றால் அவரது நுரையீரல் நிமோனியா பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதும், அது விரிவடைந்து வருவதையும் கண்டறிந்தனர். உடனடியாக அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.


latest tamil news


கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவருக்கு வைரஸை எதிர்க்கும் ஆற்றல் அவரது ரத்த பிளாஸ்மாவில் இருக்கும். அந்த பிளாஸ்மாவை நோயாளிக்கு செலுத்துவதே பிளாஸ்மா சிகிச்சை எனப்படுகிறது. இச்சிகிச்சைக்கு பிறகு அவருக்கு காய்ச்சல் குறைந்து, ஆக்சிஜன் அளவு அதிகரித்துள்ளது. தற்போது ஐ.சி.யூ.,வில் கண்காணிப்பில் இருக்கும் அவரை நாளை பொது வார்டுக்கு மாற்ற இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-ஜூன்-202022:22:14 IST Report Abuse
தமிழ்வேல் அரசு மருத்துவ மனையில் சென்றதை பாராட்ட வேண்டும். எதனால் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டியில் நிமோனியா பரவுவது கண்டுபிடிக்கப் படவில்லை ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X