பொது செய்தி

இந்தியா

ஆந்திராவிற்கு பேருந்துகளை இயக்க தயாராகும் டிஎஸ்ஆர்டிசி

Updated : ஜூன் 21, 2020 | Added : ஜூன் 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஐதராபாத் : கொரோனா ஊரடங்குகளை தொடர்ந்து, தெலுங்கானாவில் இருந்து ஆந்திராவிற்கு விரைவில் பஸ்களை இயக்க டிஎஸ்ஆர்டிசி தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஊரடங்கு தளர்வுகளில் மாநிலங்களுக்குள் பஸ் சேவை தொடங்கப்பட்டு மக்கள் பல்வேறு நகரங்களுக்குள் பயணம் செய்து வருகின்றனர். ஆனால் இரு

ஐதராபாத் : கொரோனா ஊரடங்குகளை தொடர்ந்து, தெலுங்கானாவில் இருந்து ஆந்திராவிற்கு விரைவில் பஸ்களை இயக்க டிஎஸ்ஆர்டிசி தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.latest tamil newsஇந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஊரடங்கு தளர்வுகளில் மாநிலங்களுக்குள் பஸ் சேவை தொடங்கப்பட்டு மக்கள் பல்வேறு நகரங்களுக்குள் பயணம் செய்து வருகின்றனர். ஆனால் இரு மாநிலங்களுக்கு இடையேயான சாலை போக்குவரத்து துவங்கப்படவில்லை. இந்நிலையில் அண்டை மாநிலமான ஆந்திராவிற்கு செல்ல முடியாமல் தவித்து வரும் அம்மாநிலத்தை சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில், மாநிலத்திற்கு இடையே பேருந்து (பஸ்) சேவைகளை இயக்க தெலுங்கானா மாநில அரசு சாலை போக்குவரத்து கழகம் (டிஎஸ்ஆர்டிசி) [TSRTC] தயாராகி வருகிறது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகளை இயக்குவது குறித்து அண்டை மாநிலங்களுடன் கலந்துரையாடுமாறு மாநில அரசு ஆர்டிசி (RTC) அதிகாரிகளுக்கு உத்தர விட்டது. இதனால் நிர்வாக இயக்குனர்கள் உட்பட டிஎஸ்ஆர்டிசி அதிகாரிகள் குழு ஆந்திராவில் உள்ள தங்கள் குழுவுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்படி, தெலுங்கானாவின் (டிஎஸ்ஆர்டிசி) மற்றும் ஆந்திராவின் (ஏபிஎஸ்ஆர்டிசி) மாநிலங்களுக்கு இடையேயான பஸ் சேவைகளை இயக்குவது தொடர்பாக விஜயவாடாவில் அதிகாரிகள் குழு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.


latest tamil newsஇதன்படி, முதற்கட்டமாக 256 பஸ்களை இயக்கவும், நிலைமை (தேவைகள்) மற்றும் கோரிக்கையின் அடிப்படையில் படிப்படியாக பஸ்களை அதிகப்படுத்த ஆந்திர மாநில சாலை போக்குவரத்து கழகம் (APSRTC) பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக தெலுங்கானா மாநில தலைமை போக்குவரத்து மேலாளர் முனி சேகர் கூறுகையில், மாநிலங்களுக்கு இடையேயான பஸ்களின் சேவையை (எண்ணிக்கை) அதிகப்படுத்துவது குறித்து நாங்கள் உறுதியான முடிவு செய்யவில்லை. இறுதி முடிவு எடுப்பதற்கு முன் ஏபிஎஸ்ஆர்டிசி உடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். பஸ் சேவை குறித்த இருமாநிலத்திற்கு இடையான விவாதங்கள் ஐதராபாத்தில் நடைபெறும். இந்த சந்திப்பின் போது மற்ற நடவடிக்கை குறித்தும் ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்படும்.

ஊரடங்கிற்கு முன்பு, பெரும்பாலும் மகாத்மா காந்தி பேருந்து நிலையத்தில் தெலுங்கானாவில் இருந்து 700 பஸ்கள் ஆந்திர மாநிலத்திற்கு இயக்கும் இடத்தில் இருந்தும், ஏபிஎஸ்ஆர்டிசியில் இருந்து தெலுங்கானாவிற்கு 900 பஸ்களை இயக்குகிறது. இந்த பஸ்களில் பெரும்பாலாவை ஐதராபாத், ஓங்கோல், விஜயவாடா, விசாகப்பட்டிணம், நெல்லூர், திருப்பதி, ராஜமுந்திரி, ஏலூரு மற்றும் கர்னூல் இடையே இயக்கப்படும். தற்போது மாநிலங்களுக்கு இடையேயான பஸ் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு 3 மாதங்கள் ஆகின்றன. தெலுங்கானா மாநிலத்தில் டிஎஸ்ஆர்டிசி (TSRTC) மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்களை இயக்கினாலும், ஐதராபாத் மண்டலத்தில் பஸ் சேவை இயக்கப்படவில்லை. அத்துடன் இரு மாநிலத்திற்கும் இடையே பஸ் சேவை மீண்டும் தொடங்கப்படவில்லை.


latest tamil newsதொடர்ந்து, ஒரு மாதமாக பயணிகளின் வருவாய் மற்றும் ஆந்திராவின் ஒத்துழைப்புகளால் இருமாநிலத்திற்கு இடையேயான பஸ் சேவை, மாநிலத்தை மேம்படுத்த உதவும். நாங்கள் 100 சதவீத பாதுகாப்பு மற்றும் இருக்கை வசதியுடன் பஸ்களை இயக்குவோம். ஆனால் பஸ்களில் நிற்க அனுமதியில்லை. பயணிகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு, பஸ்சில் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி போன்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். பஸ்களும் அவ்வப்போது சுத்திகரிக்கப்படும். மேலும் பயணிகளின் கட்டணத்தில் எவ்வித உயர்வுமின்றி சாதாரண கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
21-ஜூன்-202020:17:25 IST Report Abuse
R.Kumaresan வைரஸ், வைரஸ் நோய் பரவல், ஊரடங்கு உத்தரவு..R.Kumaresan. இந்திய அரசு மாநிலங்களுக்கு இடையே ஏதோ பேருந்தை இயக்கலாம்னு சொல்லிட்டாங்க தமிழ்நாட்டில் ஜூன்1 பேருந்தை இயக்கி வைரஸ் நோய் அதிகரிப்பது நிற்காமல்தான் ஜூன் 19லிருந்து ஜூன் 30வரை 4 மாவட்டத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு சொல்லியிருக்காங்க..R.Kumaresan. தமிழ்நாட்டில் சென்னை ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ1000 கொடுத்து முழு ஊரடங்கு உத்தரவு சொல்லியிருக்காங்க..R.Kumaresan.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X