பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் இன்று 15 பேருக்கு கொரோனா; தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்பு

Updated : ஜூன் 21, 2020 | Added : ஜூன் 21, 2020
Share
Advertisement

கோவை: கோவையில், கொரோனாவுக்கு பலியான முதியவர் உட்பட, இன்று ஒரே நாளில், 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.



latest tamil news



கோவையில் இன்று கொரோனாவுக்கு, 77 வயது முதியவர் பலியானார். கோவை காந்திபுரம் பகுதியில் மொபைல் கடை உரிமையாளர் கடந்த வாரம் செங்கல்பட்டில் உள்ள உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சிக்கு சகோதரியுடன் சென்று வந்தார். இதையடுத்து அவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கும், அவரது தங்கை உட்பட குடும்பத்தினர் நான்கு பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது; அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கோவை ராமநாதபுரம், சிறுமுகை, காளப்பட்டி, வடசித்தூர், கரும்புக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 15 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


பல்வேறு பகுதிகளுக்கு 'சீல்'


கோவை சின்னியம்பாளையம், பூமார்கெட், ராஜவீதி, பெரியகடைவீதி, பூமார்கெட், செல்வபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், கோவை காந்திபுரம், நான்கு மற்றும் ஐந்தாவது வீதிகள் அடைக்கப்பட்டன.


latest tamil news




பலி மூன்றாக உயர்வு


கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்த, 77 வயது முதியவர் மூச்சுத்திணறலுக்காக நேற்று முன்தினம் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், அன்று இரவே உயிரிழந்தார். முதியவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து முதியவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு கோவையில் இருவர் உயிரிழ்துள்ள நிலையில் தற்போது பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.


தாய்க்கு கொரோனா; தப்பிய சேய்


கோவைப்புதூர் பகுதியை சேர்ந்த, 23 வயது கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று உறுதியானது. கடந்த, 9ம் தேதி கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த, 17ம் தேதி அவருக்கு சிசேரியன் மூலம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது.


latest tamil news




ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ.,க்கு தொற்று


ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., கார்த்திகேயனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து பெரம்பலுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடும்பத்தினருடன் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X