நேபாள எப்.எம்.,மில் இந்திய விரோத பிரசாரம் ஒலிபரப்பு

Updated : ஜூன் 21, 2020 | Added : ஜூன் 21, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

புதுடில்லி: நேபாள நாட்டின் எப். எம்.,ரேடியோக்களில் இந்திய விரோத பிரசாரம் ஒலிபரப்பு செய்யப்படுவதாக எல்லையோர கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.



latest tamil news



இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகளான லிபுலேக், கலாபணி, மற்றும் லிம்பியாதுரா போன்ற பகுதிகள் தங்கள் நாட்டிற்கு சொந்தமானவை என புதிய வரைபடத்தை நேபாளம் தயாரித்து உள்ளது. அதுமட்டுமல்லாது அந்நாட்டின் பார்லியிலும் புதிய வரைபடத்திற்கான ஒப்புதலை பெற்றுள்ளது.

நேபாளத்தின் செய்கைக்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்து வந்த போதிலும் எதையும் கண்டு கொள்ளாமல் புதிய வரைபட விவகாரத்தை மேற்கொண்டு வருகிறது நேபாளம். இந்நிலையில் எல்லையோர பகுதிகளில் நேபாள நாட்டிற்கு சொந்தமான எப்.எம்.,ரேடியோக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ரேடியோவில் பிரச்னைக்குரிய பகுதிகளை ஆதரிக்கும் விதமான பிரசாரங்களை ஒலிபரபப்பி வருவதாக எல்லையோர பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்து உள்ளனர்.


latest tamil news




இதனிடையே நேபாளத்தின் தார்ச்சுலா பகுதியை சேர்ந்த மாவட்ட நிர்வாகம் எப்.எம்., ரேடியோ துவக்கியதாக கூறப்படும் இந்திய விரோத பிரசாரம் குறித்து எந்தஒரு தகவல்களும் தங்களுக்கு கிடைக்க வில்லை என தெரிவித்து உள்ளது.

இந்த விசயத்தில் எங்கள் உளவு பிரிவிடம் இருந்து எந்த ஒரு தகவலும் இல்லை என பித்தோ ராகர் போலீஸ் எஸ்.பி., பிரீதி பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார். தர்ச்சுலா பகுதியின் வட்ட அதிகாரி வி.கே. ஆச்சார்யாவும் நேபாளத்தின் இதுபோன்ற இந்திய விரோத பிரச்சாரம் பற்றி எங்கள் உளவுத்துறை இதுவரை பேசவில்லை என கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
22-ஜூன்-202008:58:39 IST Report Abuse
natarajan s திரும்ப மாதேசிகள் பிரச்சினையை தூண்டி விட்டால் சப்த நாடியும் அடங்கிவிடும். அவர்கள் blockade செய்தால் போதும், நேபால் காய்ந்து விடும்.எதுவும் இந்தியாவில் இருந்து அங்கு கொண்டு போக முடியாது.சீனாவில் இருந்து கொண்டு வருவதனால் கால விரையம், செலவு அதிகம். தற்சமயம் அங்கு tourist யாரும் வருவதில்லை , பொருளாதாரம் படு மோசம்.
Rate this:
Cancel
Jegan Nicholas - Tirunelveli,இந்தியா
22-ஜூன்-202004:08:18 IST Report Abuse
Jegan Nicholas சீனாவின் அடிவருடும் இந்த நேபாளிக்கு கொஞ்சம் கொரோனா அனுப்பி வைங்கப்பா.
Rate this:
Cancel
21-ஜூன்-202022:07:44 IST Report Abuse
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா கேடிகட்டு, இங்கிருக்கும் முல்லாகளை பத்திரமாக பாகிஸ்தானுக்கு அணிப்பி விட்டு நாங்கள் இந்தியர்கள் சந்தோசமாக எங்கள் தேசத்தில் இருப்போம். இந்தியா ராணுவ நடவடிக்கை மூலம் நேபாளை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விட்டு, பின்னர் அங்கு மக்கள் ஆட்சியை மலரச்செய்து வெளியேற வேண்டும். சீனாவை வாசலுக்கு வெளியே வைத்திருக்கும் இந்தியாவுக்கே இவ்வளவு பிரச்சனை என்றால், விருந்து வைத்திருக்கும் பாகிஸ்தானுக்கு என்ன கதியோ? இந்தியாவின் வேலை மிக சுலபமாக முடிந்துவிடும் போலிருக்கிறதே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X