பொது செய்தி

இந்தியா

கொரோனா பாதிப்பை கண்டறிய 71 லட்சம் விரைவு பரிசோதனை கருவிகள்

Updated : ஜூன் 21, 2020 | Added : ஜூன் 21, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

புதுடில்லி : கொரோனா பாதிப்புகளை கண்டறிய 71 லட்சம் விரைவு பரிசோதனை கருவிகள் டில்லிக்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.latest tamil newsகொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தலைநகர் டில்லியில் நோய் பாதிப்புகள் சற்று கூடிக்கொண்டே செல்கிறது. கொரோனாவை தடுக்க வேண்டுமெனில், முதலில் நோய் தொற்றுக்கான பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை மூலம் கண்டறிந்து பாதிப்புகளுக்கு ஏற்பதனிமைப்படுத்துதலையும் கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும். இது தொடர்பாக ஐசிஎம்ஆர் கூறுகையில், டில்லியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 169 புதிய இடங்களில் 6 லட்சம் ஆன்டஜென் விரைவு கொரோனா பரிசோதனைகளை நடத்த அரசு திட்டமிட்டது. இதனால் 30 நிமிடங்களில் கொரோனா முடிவுகளை கண்டறியலாம்.


latest tamil newsநோய் பாதிப்பு அதிகமான இடங்களில், நம்பத்தகுந்த மற்றும் மலிவான பரிசோதனை அவசியமாகிறது. இதற்காக தென்கொரியாவில் இருந்தும் 50 ஆயிரம் வரை பரிசோதனை கருவிகள் வரவழைக்கப்பட்டது. இதன்மூலம் சிலதினங்களுக்கு முன் பரிசோதனை தொடங்கியது. மேலும் இங்கு கொரோனா பரிசோதனைக்காக விரைவு ஆன்டிஜென் வழிமுறை பயன்படுத்தப்படும். முதலில் சுமார் 7000 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அரசு அறிவுறுத்தலின்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனையில் ஈடுபடுகின்றன. டில்லியில் பரிசோதனை செய்யப்பட்ட 7 ஆயிரம் நபர்களில் 450 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டது. நோய் தொற்று இதில் கண்டறியப்படா விட்டால் ஆர்டி-பிசிஆர் கருவி மூலமாக சோதனை நடத்தப்படும்.

பரிசோதனை கருவிகளின் உற்பத்தி அதிகரிப்பால் டில்லிக்கு 10 நாட்களுக்குள் 71 லட்சம் விரைவு பரிசோதனை கருவிகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. மேலும் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
22-ஜூன்-202009:44:03 IST Report Abuse
S.Baliah Seer நோய் தொற்று இதில்....,அதாவது இந்த புதிய கருவிகள் மூலம் கண்டறியப்படா விட்டால் ...ஆர்டி-பிசிஆர் கருவி மூலம் சோதனை நடத்தப்படும்.ஆக இந்த புதிய கருவி நம்பக தன்மை அற்றதா? ஒரே சோதனை...அதுவும் நூற்றுக்கு நூறு சரியான முடிவைக் கொடுக்க வேண்டும் என்ற நிலை வர வேண்டும்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
21-ஜூன்-202021:44:50 IST Report Abuse
தல புராணம் Efforts to combat Covid-19 in India hit by imported reagent shortages, from Chemistry World.
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
21-ஜூன்-202021:33:19 IST Report Abuse
sundarsvpr சோதனை அதிகம் செய்வது முடிவு தெரிய தெரிய நடவடிக்கையின் வேகம் அதிகரிக்கும். மருந்து கண்டுபிடிக்கும் வரை மரணங்கள் தடுக்க இயலாது. மரணங்களுடன் போராட உடலுக்கு தெம்பு வேண்டும்.அதற்கும் திட்டம் வேண்டும். மக்களுக்கு நல்ல தூக்கம் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இரவு 10 மணிக்கு மேல் நிகழ்வுகள் தடைசெய்யவேண்டும்(தொலைக்காட்சி) முக்கியமாய் சூர்ய ஒளி காற்றோட்டம் தேவை காபி டீக்கு பதில் பானகம் பழரசம் எடுத்துக்கொள்ளலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X