கனடாவில் புதிதாக 390 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 21, 2020 | Added : ஜூன் 21, 2020
Share
Advertisement

ஒட்டாவா : கனடாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து மேலும் 390 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 64 பேர் பலியாகினர் என அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கனடாவிலும் அதிகரிக்கும் நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அந்நாட்டின் பிரதமர் ட்ரூடோ பல்வேறு கட்ட நடவடிக்கையை எடுத்து வருகிறார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கனடியர்களின் வேலை வாய்ப்பு குறித்தும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 390 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் தெரிய வந்தது. கனடாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 101,002 ஆக அதிகரித்தது. நாட்டில் நோய் தொற்றால் நேற்று 64 பேர் பலியாகினர். இதனால் மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 8,410 ஆக உயர்ந்தது.


latest tamil news



கனடாவில் கொரோனா தொற்றில் இருந்து 63,488 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டின் மொத்த பாதிப்புகளில் பாதியளவு கியூபெக் மாகாணத்திலும், அடுத்ததாக ஒன்ராறியோவிலும் பதிவாகிறது. கியூபெக்கில் புதிதாக 124 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்தமாக 54,766 பேர் பாதிக்கப்பட்டனர். அங்கு 5,417 பேர் பலியாகினர். தொடர்ந்து, ஒன்ராறியோவில் புதிதாக 206 பேர்பாதிக்கப்பட்டனர். இதுவரை 33,476 பேர் பாதிக்கப்பட்டனர். அதையொட்டி, 2,606 பேர் பலியாகினர். மேலும் கனடாவின் அல்பெர்ட்டா, பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் நோவா ஸ்காட்டியாவிலும் நோய் பாதிப்புகள் பதிவாகிறது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X