மோடியின் அமைதிக்கு பொருள் என்ன?

Updated : ஜூன் 21, 2020 | Added : ஜூன் 21, 2020 | கருத்துகள் (37)
Share
Advertisement

புதுடில்லி:இந்திய - சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில், நம் ராணுவத்தினர், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பிலும், 40க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாயினர் என தெரியவந்துள்ளது.



latest tamil news



இதையடுத்து, தினமும் அரசின் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அமைச்சர்கள், ராணுவ தளபதிகள் என, பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இப்படி நடக்கும் கூட்டங்கள், படு ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. யாருக்குமே இதைப் பற்றி தெரிவதில்லை. இப்படி ரகசியமாக நடந்த ஒரு ஆலோசனையில், மோடியும், அமித் ஷாவும் மட்டுமே இருந்தனராம். பிரதமர் வீட்டில் நடந்த இந்த சந்திப்பு, இரவில் ஆரம்பித்து விடியற்காலை வரை சென்றதாம்.

என்ன செய்யலாம்; எந்த முறையில் பதிலடி கொடுப்பது என, பல விஷயங்கள் அலசப்பட்டதாக சொல்லப்படுகிறது. விடியற் காலை, 3:௦௦ மணிக்கு தான் முடிந்தது இந்த ஆலோசனை. அதன் பிறகு தான் வீட்டிற்கு சென்றாராம், அமித் ஷா.மறுநாள், பா.ஜ.,வின் சீனியர் தலைவர்களிடம் பேசிய அமித் ஷா, 'சீனா விஷயத்தில் பிரதமர் சும்மா இருக்க மாட்டார்; பொறுத்திருந்து பாருங்கள்' என சொல்லி இருக்கிறார். இதைப் பற்றி மேலும் எந்த விபரங்களையும் தலைவர்களிடம் தெரிவிக்கவில்லையாம், அமித் ஷா.


latest tamil news



'முக்கியமான விஷயங்களில், பிரதமர் அதிகம் பேசாமல் அமைதியாக இருந்தால், ஏதாவது நடக்கப் போகிறது என அர்த்தம். மோடியின் அமைதி அப்படிப்பட்டது தான்' என்கின்றனர், சீனியர் தலைவர்கள்.'பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது போல, சீனாவிலும் நடக்குமா; அது சாத்தியமா' என்றெல்லாம் டில்லி அரசியல் வட்டாரங்களில் பேச ஆரம்பித்துவிட்டனர். 'ஏதோ உள்ளுக்குள்ளாகவே நடந்து கொண்டிருக்கிறது' என சந்தேகிக்கின்றனர், தலைவர்கள்

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chowkidar Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து
22-ஜூன்-202007:52:29 IST Report Abuse
Chowkidar Modikumar சூரிய கிரஹணம் நேற்று முடிவடைந்து விட்டது. காசியில் உள்ள பைரவரை குல தெய்வமாக கொண்ட மோடிக்கு இனி எல்லாமே வெற்றி தான். அடுத்த வேலை காங்கிரஸ் ஆட்சியில் இழந்த பாகிஸ்தான் / சீனா ஆக்ரமிப்பு பகுதிகல் இந்தியாவுடன் இணைப்பது தான். சிவனின் மறு உருவான தான் நம் பிரதமர் மோடி யால் இது சாத்தியம் ஆகும்.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
22-ஜூன்-202007:12:48 IST Report Abuse
blocked user தேசவிரோதிகளை எப்படி கையாள்வது - சீனர்களை அடித்து துவம்சம் செய்தது போல செய்யலாமா என்று யோசித்துக்கொண்டு இருக்கிறார்... உள்ளூர் எதிரிகள் ஓவராக ஆடி விட்டார்கள். அந்நியர்களுடம் ஒப்பந்தம் செய்துவிட்டு இந்தியாவுக்கு எதிராக கிளம்புவது ஆபத்தான பின்னடைவு.
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
22-ஜூன்-202006:57:08 IST Report Abuse
siriyaar சீனாவின் இறக்குமதிக்கு 23 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் முதல் பழநி நினைவாண்டாகவும் அடுத்தது அடுத்த வீரரின் நினைவாகவும் இருக்க வேண்டும் மேலும் ஒரு வீரர் மறைந்ததால் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X