ராஜஸ்தானில் மேலும் 154 பேருக்கு கொரோனா தொற்று

Updated : ஜூன் 21, 2020 | Added : ஜூன் 21, 2020
Share
Advertisement

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் புதிதாக 154 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



latest tamil news



இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ராஜஸ்தானிலும் நோய் பாதிப்பு காரணமாக பல்வேறு நடவடிக்கையை அம்மாநில அரசு எடுத்து வருகிறது. மாநிலத்தில் மேலும் 154 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்ப்டடுள்ளது. இதனால் ராஜஸ்தானில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,691 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4 பேர் இன்று பலியாகினர். இதுவரை கொரோனா பலி 341 ஆக அதிகரித்தது.


latest tamil news



புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 59 பேர் தோல்பூரையும், 31 பேர் ஜெய்ப்பூரையும், 22 பேர் ஜூன்ஜூனுவில் இருந்தும் பாதிக்கப்பட்டனர். மேலும் ஆல்வாரில் இருந்து 12 பேர், சிகாரில் இருந்து 9 பேர் மற்றும் துங்கர்பூர் மற்றும் பில்வாராவில் இருந்து தலா 5 பேர், ராஜ்சமந்த் பகுதியில் 3 பேர், நாகர் மற்றும் உதய்பூரில் இருந்து தலா 2 பேர் மற்றும் சுருவில் இருந்து ஒருவரும் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X