எல்லையில் உள்ள இந்திய வீரர்களுக்குசுதந்திரம்: தளபதிகளுடன் அமைச்சர் ராஜ்நாத் வியூகம்

Updated : ஜூன் 23, 2020 | Added : ஜூன் 21, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி: முப்படை தளபதிகளுடன் நேற்று ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தியதை அடுத்து, இந்திய - சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. சீன ராணுவம் அத்துமீறினால், உடனடியாக பதிலடி கொடுக்கும்படி இந்திய வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபகாலமாகவே, நம் அண்டை நாடான சீனா,
Rajnath Singh, india, china, border dispute, Defence Minister Rajnath Singh

புதுடில்லி: முப்படை தளபதிகளுடன் நேற்று ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தியதை அடுத்து, இந்திய - சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. சீன ராணுவம் அத்துமீறினால், உடனடியாக பதிலடி கொடுக்கும்படி இந்திய வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபகாலமாகவே, நம் அண்டை நாடான சீனா, எல்லை பகுதியில் தொடர்ந்து வாலாட்டி வருகிறது. வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் காஷ்மீரின் லடாக் பகுதியில், நம் எல்லைக்குள் அத்துமீறலில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர் சீன வீரர்கள். பிரச்னைக்கு சுமுக தீர்வு காண, இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும், இந்த மாத துவக்கத்தில் பேச்சு நடத்தினர். இதன் அடிப்படையில், சீன ராணுவம் பின்வாங்கியது.


பதற்றமான சூழல்

இந்த நடவடிக்கையின் போது, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன வீரர்கள் அமைத்திருந்த கண்காணிப்பு மையத்தை, நம் வீரர்கள் அகற்ற முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீன ராணுவத்தினர், நம் வீரர்களை கொடூரமாக தாக்கினர். இதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பில், 43 வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, எல்லையில் பதற்றமான சூழல் நிலவகிறது.

கல்வான் பள்ளத்தாக்கு பகுதி தங்களுக்கு சொந்தமானது என்றும், இந்திய வீரர்கள் இங்கு அத்துமீறி நுழைந்ததால் தான் மோதல் ஏற்பட்டது என்றும் சீன அரசு கூறி வருகிறது. இந்நிலையில், ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே, கடற்படை தளபதி கரம்பீர் சிங், விமானப் படை தளபதி, ஆர்.கே.எஸ்.பதாவுரியா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். சீன எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்னையை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.


கொடூரமாக தாக்கினர்இது குறித்து, ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த, 1996 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் நமக்கும், சீனாவுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தப்படி, எல்லையில் ரோந்து பணியில் உள்ள இரு நாட்டு வீரர்களும் துப்பாக்கி, வெடி குண்டுகள் போன்ற ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது. இதனால் தான், சமீபத்தில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலின்போது, சீன வீரர்கள் அத்துமீறிய போது, நம் வீரர்கள் துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட முடியவில்லை.

சீன வீரர்கள் இரும்புத் தடி, முள்வேலிபோன்றவற்றால், இந்திய வீரர்களை கொடூரமாக தாக்கினர்; இது, கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நடந்த ஆலோசனையில் போது, இது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, துப்பாக்கி போன்றஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்ற ஒப்பந்தத்துக்கு, இந்திய வீரர்கள், இனியும் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை என, முடிவெடுக்கப்பட்டுள்ளது.


பதிலடி

மேலும், சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய வீரர்களுக்கு, முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. எல்லையில் சீன வீரர்கள் அத்துமீறினால், உடனடியாக பதிலடி கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எல்லையில் உள்ள கமாண்டர் அந்தஸ்திலான அதிகாரிகளே, சூழலுக்கு தகுந்தபடி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முடிவு எடுக்கலாம். மேலிட உத்தவுக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

காஷ்மீரின் லே மற்றும் ஸ்ரீநகரில், ஏற்கனவே, 'சுகோய் 30, ஜாகுவார், மிராஜ், 2000' ரக போர் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன. 'அப்பாச்சி' ரக தாக்குதல் ஹெலிகாப்டர்களும் குவிக்கப்பட்டு உள்ளன. 'எந்தவித சூழலையும் எதிர்கொள்ள விமானப் படை தயார்' என, விமானப் படை தளபதியும் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

தற்போது, எல்லையில் உள்ள வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து, சீனா வாலாட்டினால், மறக்க முடியாத அளவில் பதிலடி கொடுப்பதற்கு, இந்திய ராணுவம் முழு தயார் நிலையில் இருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
22-ஜூன்-202012:57:39 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் யார் இந்தியாவை குறை சொன்னார்கள்? அப்படி யாரும் சொல்லியிருந்தால் அவர்களை பிடித்து ஜெயிலில் அடையுங்கள். மோடியையோ, பாஜக அரசையோ குறை கூறுவது இந்தியாவை குறை கூறுவதில்லை. அரசை வழிநடத்துபவர்களை குறை கூறுவதை தேசத்துரோகமாக்க நினைப்பதுதான் மிகவும் வெட்கக்கேடு. ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், பிரதமரையும் மற்றும் ஆட்சியிலிருக்கும் நபர்களையும் குறை கூறுவது தேசத்துரோகம் என்றால், அந்த தேசத்துரோகத்தை ஏழு ஆண்டுகளுக்கு முன்பே செய்தவர்கள் பாஜக-வினர்.
Rate this:
Cancel
krishnaraj - bangalore,இந்தியா
22-ஜூன்-202012:12:53 IST Report Abuse
krishnaraj First Modernise Our Armed Forces to atleast that of China to Neutralise Enemies. Second Crush Chinese Economy By All Means Incl. Better Quality-Cheaper Indian Products-Services-Global Sales. Third Send All Power-Misusing Officials
Rate this:
Cancel
venkata achacharri - india,இந்தியா
22-ஜூன்-202011:22:24 IST Report Abuse
venkata achacharri oolish people dontknow what will happen finally when there is no peace with any neighbor including our house neighbor
Rate this:
blocked user - blocked,மயோட்
22-ஜூன்-202012:55:26 IST Report Abuse
blocked userஒன் குடும்பத்தை அடித்து தூக்கினால்க்கூட சமாதானம் பேசுவாய் போல... வீரனாக சாகலாம்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X