பொது செய்தி

இந்தியா

சர்வதேச ஒற்றுமையை பறைசாற்றும் நாள் 'யோகா' தினத்தில் பிரதமர் மோடி பேச்சு

Updated : ஜூன் 23, 2020 | Added : ஜூன் 21, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
சர்வதேச ஒற்றுமையை பறைசாற்றும் நாள் 'யோகா' தினத்தில் பிரதமர் மோடி பேச்சு

புதுடில்லி:“யோகாவில் எந்த பாகுபாடும் இல்லை. சர்வதேச அளவில் ஒற்றுமையை பறைசாற்றுவதற்கான நாளாக யோகா தினம் அமைந்துள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், சர்வதேச யோகா தினம், நேற்று கடைப் பிடிக்க பட்டது.வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், அவரவர் வீட்டில் இருந்தபடியே யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர்.


வன்முறை

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களிடையே உரையாற்றிய, பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:இந்த ஆண்டு, நாம் வீட்டில் இருந்தபடியே யோகா தினத்தை கடைப் பிடிக்கிறோம். நம் குடும்பத்துடன் உள்ள இணைப்பை வலுப்படுத்தும் நாளாகவும், இது அமைந்து உள்ளது. யோகாவை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக் கொள்ளுங்கள். யோகா, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, குடும்ப வன்முறையை ஒழிக்கும். யோகாவில் எந்த பாகுபாடும் இல்லை.

இது இனம், நிறம், பாலினம், மதம் மற்றும் தேசத்திற்கு அப்பாற்பட்டது. யார் வேண்டுமானாலும் யோகா பயிற்சிகளை செய்யலாம். இது ஒற்றுமைக்கான சக்தியாக உருவெடுத்து, மனித குலத்தின் பிணைப்பை ஆழப்படுத்துகிறது. சர்வதேச அளவில் ஒற்றுமையை பறைசாற்று வதற்கான நாளாக, யோகா தினம் அமைந்துள்ளது. உலகம் முழுதும் உள்ள கொரோனா நோயாளிகள் பலரும், யோகாவால் பயனடைந்து வருகின்றனர்.

இது போன்ற கடினமான காலங்களில், போராடி வெல்வதற்கான நம்பிக்கையை, யோகா நமக்கு வழங்கும். உடல் வலிமையையும், மன அமைதியையும், யோகா நமக்கு அளிக்கிறது. யோகாவின் தேவையை தற்போது உலகம் உணர்ந்துள்ளது. கொரோனா வைரஸ், நம் சுவாச அமைப்புகளை தாக்குகிறது. சுவாச பயிற்சியான, 'பிராணாயாமம்' செய்வதன் மூலம், நம் உடலில் உள்ள சுவாச அமைப்புகள் வலுப்படுகின்றன. யோகா பயிற்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆகையால், யோகாவை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


மதிப்பற்ற பரிசு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'டுவிட்டரில்' குறிப்பிட்டு உள்ளதாவது:யோகா என்பது, உடல், மனம், சிந்தனை செயல்முறையை ஒருங்கிணைக்கும். மனித நேயம், சிறப்பான செயல்பாடு, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வழி. ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் வழங்கப்பட்டுள்ள, இந்திய கலாசாரத்தின் இந்த விலைமதிப்பற்ற பரிசுக்கு, பிரதமர் மோடியின் முயற்சியால், சர்வதேச நாடுகள் அங்கீகாரம் வழங்கியுள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்தியாவின் மிகச் சிறந்த பரிசுசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, தான் யோகா பயிற்சிகள் செய்யும் புகைப்படங்களை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது:அனைவருக்கும், சர்வதேச யோகா தின நல்வாழ்த்துகள். உலகத்திற்கு, இந்தியா அளித்த மிகச்சிறந்த பரிசு, யோகா. அதிக மக்கள், யோகா பயிற்சிகள் செய்வதை கண்டு, மகிழ்ச்சியடைந்துள்ளேன்.

மன அழுத்தம், சண்டை, குறிப்பாக கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் யோகா பயிற்சிகளை மேற்கொண்டால், உடலும், மனமும் அமைதி பெறும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பாதுகாப்பு படை வீரர்கள்8,800 அடி உயரத்தில், 'யோகா'சிக்கிமில், 18 ஆயிரத்து, 800 அடி உயரத்தில், உறைபனி வெப்பநிலையில், பாதுகாப்பு படையினர், நேற்று யோகா பயிற்சி மேற்கொண்டனர். சர்வதேச யோகா தினத்தை, நம் ராணுவ வீரர்களும், பாதுகாப்பு படையினரும் உற்சாகமாக கடைப்பிடித்தனர். சிக்கிம் மற்றும் லடாக் உள்ளிட்ட இடங்களில், நம் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர், யோகா பயிற்சியில் பங்கேற்றனர்.

வடக்கு சிக்கிமில், 18 ஆயிரத்து, 800 அடி உயரத்தில், ஜீரோ டிகிரி செல்ஷியசுக்கும் குறைவான உறைபனி வெப்பநிலையில், ஐ.டி.பி.பி., என்படும் இந்தோ -- -திபெத் எல்லை பாதுகாப்பு படையினர், யோகாவில் ஈடுபட்டனர்.இவர்களில் மற்றொரு பிரிவினர், உத்தரகண்ட் மாநிலத்தில், 10 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள ஆலி நகரில், யோகா மேற்கொண்டனர். இந்திய ராணுவத்தினர், ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரின், ரங்கிரெத்தில் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasan - doha,கத்தார்
22-ஜூன்-202017:21:24 IST Report Abuse
vasan இப்போது உள்ள வாழ்க்கை முறைக்கு யோகா அவசியம்...வேலை, குடும்ப பிரச்சினை போன்ற பல காரணங்களுக்காக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.. தவறான முடிவையும் தேடிக்கொள்கிறார்கள் அதை தவிர்க்க யோகா, தியானம் ரெண்டும் நல்லது.. கடவுள் எல்லோருக்கும் எல்லாவற்றையும் கொடுப்பதில்லை....
Rate this:
Cancel
Anandan - chennai,இந்தியா
22-ஜூன்-202010:05:02 IST Report Abuse
Anandan விளம்பரம் மட்டுமே முக்கியம்.
Rate this:
Cancel
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
22-ஜூன்-202007:42:37 IST Report Abuse
Mirthika Sathiamoorthi Onething I do not understand...why he keep promoting yoga? I am from village..in my village. My mom never do yoga...my father no way..my brothers my sister my uncle my aunt my relatives my neighbour even next village people also not do any yoga..who ever I saw in my society they never ever did that.( guys hope you also feel the same)...I heard about yoga..but not this much serious..why is that now so serious? Is that give any benefit for our indian economy?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X