சென்னை; 'ஐந்து கட்ட ஊரடங்கிற்கு பின்னும், கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல், முதல்வர் இ.பி.எஸ்., கைபிசைந்து நிற்கிறார்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:கொரோனாவை முழுமையாக, எப்போது கட்டுப்படுத்த முடியும் என்ற கேள்விக்கு, 'இறைவனுக்கு தான் தெரியும்; நாம் என்ன டாக்டரா?' என, ஊடகவியலாளர்களை நோக்கி, முதல்வர் இ.பி.எஸ்., கேட்டுள்ளார்.அவரது பேட்டி, மனக்கவலை அளிப்பதாக உள்ளது. தமிழக மக்களின் கவலைகளை தீர்த்து வைப்பதாக இல்லை. 'மூன்றே நாளில், கொரோனா ஒழிந்து விடும்' என, இவர் தான் இறைவனை போல பேட்டி கொடுத்தார்.
மறைக்க முயற்சி'இது பணக்கார வியாதி; வயதானவர்களுக்கு தான் வரும்' என, மருத்துவ நிபுணரை போல சொன்னார்.'யாரும் பயப்படத் தேவையில்லை' என, போலி ஆறுதல் சொன்னார். ஐந்து கட்ட ஊரடங்கிற்குப் பின்னும், கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் கைபிசைந்து நிற்கிறார்.மருத்துவமனையில், அமைச்சர் கே.பி.அன்பழகன் அனுமதிக்கப்பட்ட தகவல் கிடைத்த மறுநாள், அவரை நான் தொடர்பு கொண்டு பேசினேன். அவரிடம் செய்தியை உறுதிப்படுத்திய பின், அவர் நலமடைய வேண்டி செய்தி வெளியிட்டேன்.
அமைச்சருக்கே கொரோனா என, ஊடகங்கள் செய்தி வெளியிட்டதும், வழக்கம் போல முதல்வர் மறைக்க முயற்சிக்கிறார். முதல்வர் அலுவலகத்தில், முதுநிலை தனிச்செயலராகப் பணியாற்றி வந்த, பி.ஜே.தாமோதரன், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இறந்து போனார். ஆனால், முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், 'உடல்நலக் குறைவால்' என, குறிப்பிடப்பட்டுள்ளது; எதற்காக மறைக்க வேண்டும்?ஆலோசனைகொரோனா மறைந்தது என்ற செய்தி தான், முதல்வருக்கு நல்ல பெயர் வாங்கித் தருமே தவிர; கொரோனாவை மறைப்பதாலோ, எண்ணிக்கைகளை குறைத்துக் காட்டுவதாலோ, நல்ல பெயர் வாங்க முடியாது.மக்கள் மற்றும் மக்களின் பிரதிநிதிகள் சொல்லும் ஆலோசனைகளை கேட்டு, பரிசீலித்து நடந்து, கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குங்கள்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE