புதுடில்லி:''லடாக் மோதல், நமக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவுடனான ராணுவ ரீதியிலான கொள்கையை மட்டுமல்லாமல், பொருளாதார கொள்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டுள்ளது,'' என, முன்னாள் ராணுவ தளபதி, வி.பி.மாலிக் கூறியுள்ளார்.
இந்திய ராணுவ தளபதியாக, 1999 - 2000 வரை பதவி வகித்தவர், வி.பி.மாலிக். இந்திய - சீன எல்லையில் நிலவும் பதற்றம் குறித்தும், அதனால் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள மாற்றங்கள் குறித்தும் அவர் கூறியுள்ளதாவது:சீனாவை பார்த்து, நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை; அதற்காக அதிகமாக கவலைப்பட வேண்டிய தேவையும் இல்லை. நம் ராணுவம் மிகவும் திறமையானது. மலைப் பிராந்தியத்தில், சீன வீரர்களை விட, நம் வீரர்கள் உறுதியாகவும், திறமையாகவும் போரிடக் கூடிய திறன் உடையவர்கள்.லடாக் அருகே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சமீபத்தில் நடந்த மோதல், நமக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவுடனான நம் கொள்கையை மாற்ற வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியுள்ளது. சீனாவுக்கும், நமக்குமான ராணுவ ரீதியிலான கொள்கையை மட்டுமல்லாமல், பொருளாதார ரீதியிலான கொள்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். சீனாவுடன் மீண்டும் போருக்கான சூழல் உள்ளதா என கேட்கப்படுகிறது. நம் ராணுவத்துக்கு திறமை உள்ளது. அப்படி போர் நடந்தால், சில பகுதி களில், நாம் கடுமையான தாக்குதல்களை சீனா மீது தொடுக்க முடியும்.நம்மிடம் ஆயுதம் குறைவாக இருந்தாலும், நம் வீரர்கள் திறமை மிக்க வர்கள். சீனாவுடனான எல்லையை பாதுகாக்கும் அனைத்து திறமையும் நம் ராணுவத்துக்கு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE