புதுடில்லி:ஜப்பான் நாட்டு பத்திரிகையில் வெளியான காட்டுரையை மேற்கோள்காட்டி, 'நரேந்திர மோடி, சரண்டர் மோடியாகி விட்டார்' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் மீண்டும் கிண்டலடித்து உள்ளார்.
இந்திய - சீன எல்லையில், சமீபத்தில் இரு தரப்புக்கும் இடையே மோதல் நடந்தது. சீன வீரர்கள் கொடூரமாக தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர், வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில், 43 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி., ராகுல், கல்வான் பள்ளத்தாக்கை சீனா ஆக்கிரமித்து விட்டதாக கூறி, 'இந்திய நிலப்பரப்பை, சீனாவிடம் ஒப்படைத்து விட்டார், பிரதமர் மோடி' என, கூறியிருந்தார்.
இதற்கு, மத்திய அமைச்சர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராகுல், அரசியல் முதிர்ச்சியின்மை காரணமாக இப்படி கூறுவதாக, பா.ஜ., வினர் விமர்சித்திருந்தனர். இந்நிலையில், 'சீனாவிடம் இந்தியாவின் சமாதான கொள்கை தோல்வி அடைந்து விட்டது' என்ற தலைப்பில், கிழக்காசிய நாடான ஜப்பான் பத்திரிகையில் வெளியாகி உள்ள கட்டுரையை, சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ராகுல், அதில், 'நரேந்திர மோடி, சரண்டர் மோடியாகி விட்டார்' என, மீண்டும் கிண்டலடித்து உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE