பொது செய்தி

இந்தியா

கொரோனா நோயாளிகளுக்காக 19 மாடி கட்டிடத்தை வழங்கிய பில்டர்!

Updated : ஜூன் 21, 2020 | Added : ஜூன் 21, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
மும்பை : மும்பையைச் சேர்ந்த பில்டர் ஒருவர் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையத்திற்காக கட்டி முடிக்கப்பட்டு குடிபுக தயார் நிலையில் உள்ள புத்தம் புதிய 19 மாடி கட்டிடத்தை மும்பை மாநகராட்சிக்கு வழங்கியுள்ளார்.மஹாராஷ்டிரா மாநிலம் கொரோனா வைரஸின் பிடியில் சிக்கி திணறி வருகிறது. மாநிலத்தின் பலி எண்ணிக்கை தற்போது 6 ஆயிரத்தை கடந்துள்ளது. 1.3 லட்சம் பேர் கொரோனாவால்
Mumbai Builder, Hands Over, Building, COVID 19 Facility

மும்பை : மும்பையைச் சேர்ந்த பில்டர் ஒருவர் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையத்திற்காக கட்டி முடிக்கப்பட்டு குடிபுக தயார் நிலையில் உள்ள புத்தம் புதிய 19 மாடி கட்டிடத்தை மும்பை மாநகராட்சிக்கு வழங்கியுள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம் கொரோனா வைரஸின் பிடியில் சிக்கி திணறி வருகிறது. மாநிலத்தின் பலி எண்ணிக்கை தற்போது 6 ஆயிரத்தை கடந்துள்ளது. 1.3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மும்பை மாநகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மொத்த இறப்புகளில் 3,559 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள். கொரோனா போரிலிருந்து மும்பையை மீட்டெடுக்க மும்பை மக்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை அரசுக்கு செய்து வருகின்றனர்.


latest tamil newsஅந்த வகையில், ஷீஜி ஷரன் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் மெஹுல் சங்க்வி என்பவர், தனது பங்குதாரர்களுடன் கலந்துரையாடிய பின்னர் மும்பையின் மலாட் பகுதியில் அமைந்துள்ள 19 மாடி கட்டிடத்தை கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையமாக மாற்றிக்கொள்ள அரசுக்கு அளித்துள்ளார். இங்கு 130 குடியிருப்புகள் உள்ளன. அவை பிளாட் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க தயார்நிலையில் இருந்தது. தற்போது ஒரு பிளாட்டுக்கு நான்கு நோயாளிகள் வீதம் அந்த கட்டிடத்தில் 300 நோயாளிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
22-ஜூன்-202011:58:55 IST Report Abuse
Thiagarajan Kodandaraman ONE BIG POLITICIAN WROTE THEIR HOUSE TO Public Health care Purpose on 7 Years BACK. BUT STILL Not hand overd to PUBLIC HOW THAT LEADER FAMILY Cheating our TAMILIANS. Shame Shame
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
22-ஜூன்-202010:52:54 IST Report Abuse
spr நம்ம கலைஞர் கூட தனது வீட்டை மருத்துவ மனையாக மாற்றாகி சொல்லி ஏதோ உயில் எழுதி வைத்தாராம் அதனை இப்பொழுது கொரோனா தனமிக் படுத்தும் விடுதியாக அறிவிக்கலாமே
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
22-ஜூன்-202009:01:57 IST Report Abuse
Chandramoulli நல்லதை வரவேற்கவில்லை என்றாலும் குற்றம் சொல்லியே வண்டியை ஓட்டும் ஒரு சிலர் இங்கு அதிகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X