சீனாவை விமர்சிக்க காங்., தயங்குவது ஏன்?

Updated : ஜூன் 22, 2020 | Added : ஜூன் 21, 2020 | கருத்துகள் (106)
Share
Advertisement

புதுடில்லி:இந்தியா- - சீனா மோதலுக்கு பின், மோடியைக் கடுமையாக விமர்சித்து வருகிறது, காங்கிரஸ். சோனியாவும், ராகுலும் தினமும் அறிக்கை வெளியிட்டு, பிரதமரை கேள்வி கேட்டு வருகின்றனர்.



latest tamil news



மக்கள் மத்தியில் மோடியின் மதிப்பை குறைக்க, இதுதான் நல்ல சமயம் என, காங்., கருதுகிறது. அதற்கு ஏற்ப, 'சரியாக செயல்படாமல், இந்திய எல்லைப் பகுதியை சீனாவிற்கு விட்டுக் கொடுத்து விட்டார் மோடி' என, ராகுல் சொல்லி வருகிறார். அனைத்து கட்சி கூட்டத்தில், சோனியாவும் மோடியை விமர்சித்து உள்ளார். ஏறக்குறைய அனைத்து எதிர்க்கட்சிகளும் சீனாவை கண்டனம் செய்துள்ளன. ஆனால், காங்கிரசும், இடதுசாரி கட்சிகளும், இந்த விஷயத்தில் அடக்கி வாசித்து வருகின்றன.

சீனாவை அதிகம் காங்கிரஸ் சாடாமல் இருக்க காரணம் உள்ளது என்கின்றனர், பா.ஜ.,வினர். 'காங்கிரசும், சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியும், ௨௦௦௮, ஆகஸ்டில், ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டன. இரு கட்சி களும் கருத்து பரிமாற்றம், ஒத்துழைப்பு என, இந்த ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டு உள்ளது' என்கின்றனர், பா.ஜ.,வினர். அந்த சமயத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. 'இந்த ஒப்பந்தத்தில், காங்கிரஸ் தரப்பிலிருந்து கையெழுத்திட்டது, ராகுல்; சீனா கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கையெழுத்திட்டது, ஜி ஜின்பிங். இப்போது இவர்தான் சீனாவின் அதிபர்.


latest tamil news



இதனால் தான், சீனாவிற்கு எதிராக பேசாமல், காங்., அடக்கி வாசிக்கிறது' என்கின்றனர், பா.ஜ., கட்சியினர். ஆனால், இதற்கும் காங்., பதிலடி கொடுத்துள்ளது. '௧2 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி, தங்களுடைய தவறை, பா.ஜ., மறைக்கப் பார்க்கிறது' என, காங்., கூறுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (106)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
27-ஜூன்-202023:47:53 IST Report Abuse
unmaitamil ரோட்டில் ஊளையிட்டு ஓடுவதைப்பார்த்து, அது கேள்விகேட்கிறது பதில்சொல் என்றால் என்ன பதில் சொல்வது ???
Rate this:
Cancel
dina - chennai,இந்தியா
26-ஜூன்-202019:27:49 IST Report Abuse
dina காங்கிரஸ் திருடர்களை இனி நாட்டில் நடமாட விடலாமா?
Rate this:
Cancel
Ganthi - chennai,இந்தியா
25-ஜூன்-202010:45:49 IST Report Abuse
Ganthi இந்த குடும்பம் சீனா வின் கைக்கூலி என்பது தெளிவாக தெரிகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X