சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி ஐ.ஏ.எஸ்., அதிகாரி மதுரையில் சுற்றிவளைப்பு

Added : ஜூன் 21, 2020
Share
Advertisement

மதுரை; மதுரையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி எனக் கூறி வலம் வந்த போலி நபர், கைது செய்யப்பட்டார்.

மதுரை, விளாங்குடி செக்போஸ்டில், போலீசார், வருவாய்த் துறையினர், நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 'இ - பாஸ்' இல்லாத காரில் வந்தவரிடம் விசாரித்தனர்.அவர், கொடைக்கானல் அருகே புதுபுத்துாரைச் சேர்ந்த வேல்மணி, 26, என்பது தெரிந்தது. 'நான் ஐ.ஏ.எஸ்., அதிகாரி; பயிற்சியில் உள்ளேன்' என்றார். இதனால், அவரை மதுரை நகருக்குள் அனுமதித்தனர். இது குறித்து, கலெக்டர் வினய்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில், வேல்மணி என்ற பெயரில், ஐ.ஏ.எஸ்., பயிற்சி பெறுபவர் யாருமில்லை எனத் தெரிந்தது.

இதையடுத்து, வேல்மணியை பிடித்து விசாரித்ததில், போலி ஐ.ஏ.எஸ்., அதிகாரி எனத் தெரிந்தது. அவரை கைது செய்தனர்.போலீசார் கூறியதாவது:எம்.ஏ., படித்த வேல்மணி, விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். பழநியைச் சேர்ந்த செவிலியரை காதலித்து, கடந்த மாதம் பதிவு திருமணம் செய்து கொண்டார். திண்டுக்கல், திருச்சி என ஒவ்வொரு கலெக்டர் அலுவலகமாக, பயிற்சிக்கு செல்வது போல் காரில் சென்று, பொது பிரச்னை குறித்து மனு அளித்து வந்துள்ளார்.திருமண வரவேற்பு பத்திரிகையை, ஒருவருக்கு கொடுக்க வந்தபோது, எங்களிடம் சிக்கினார். இவர், யாரையும் ஏமாற்றவில்லை. மனதளவில் தன்னை, ஐ.ஏ.எஸ்., ஆக நினைத்து, வலம் வந்துள்ளார். அவரிடம் விசாரணை நடக்கிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X