பொது செய்தி

இந்தியா

கேரளாவில் புதிதாக 133 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 22, 2020 | Added : ஜூன் 22, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
kerala, corona, new coronavirus cases, kerala news, coronavirus kerala, கேரளா, கொரோனா, தொற்று, பலி, பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே நாளில் 133 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,170 ஆனது. jகொரோனாவுக்கு மொத்தம் இதுவரை 21 பேர் பலியாகி உள்ளார்கள். புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில் 80 பேர் வெளிநாடுகளில் இருந்தும் 43 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் தொடர்பின் மூலம் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 9 பேருக்கு கொரோனா பரவியது.


latest tamil news



மாநிலத்தில் மொத்தம் 1,43,969 பேர் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களில் 2,050 பேர் தனிமை வார்டுகளில், வெவ்வேறு மருத்துவமனைகளில் உள்ளனர். புதிதாக பரிசோதிக்கப்பட்டவர்களில் திருச்சூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 16 பேருக்கு தொற்று உறுதியானது. பாலக்காட்டில் 15 பேருக்கும், கொல்லத்தில் 13 பேருக்கும், இடுக்கியில் 11 பேருக்கும் தொற்று ஏற்பட்டது. கடந்த 24 மணிநேரத்தில் 5,239 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மாநிலத்தில் கொரோனா பரவக்கூடிய 109 பகுதிகள் கட்டுப்படுத்தப்படட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
22-ஜூன்-202013:53:06 IST Report Abuse
Balasubramanian Ramanathan நிறுத்தும்மா.‌ நீங்க எந்த சொன்னாலும் நம்ப மாட்டோம் கேரளானா சொன்னா நாங்க ஆண்டவர் கமல்ஹாசன் சொல்றதை மண்டூர் தான் நம்புவோம்.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
22-ஜூன்-202010:01:36 IST Report Abuse
S.Baliah Seer கேரள மாநிலத்தில் புதிதாக தோற்று வெறும் நூறு இருநூறு. ஆனால் சென்னையில் 1500 -க்கு மேல் தினமும்.சென்னை என்ன சொர்க்க புரியா?அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு கிராமங்களில் இருந்து சென்னைக்கு பிழைக்க வந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததால் வந்த வினை இது.அவர்கள் எங்கு வேண்டுமானாலும் ஆளும் கட்சிகள் துணை கொண்டு குடிசை போடலாம்.ஒரு தலை நகரில் எந்த வேலையிலும் இல்லாமல் ஊர் சுற்றலாம். ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து ,மாமூல் மூலம் பணம் கொழிக்கலாம். வாக்கு வங்கிக்காக வளர்த்து விடப்பட்டவர்களால் இன்று சென்னை மாநகரம், மாநரகமாக மாறி பொது மக்களை வாட்டி வதைக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X