பொது செய்தி

இந்தியா

பேத்தியை பார்க்க அமித் ஷாவுக்கு தடை: எஸ்.பி.ஜி., கறார்

Updated : ஜூன் 22, 2020 | Added : ஜூன் 22, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு, இரண்டாவது பேரக் குழந்தை பிறந்துள்ளது. தாத்தாவான அமித் ஷா, தன் பேத்தியை கையில் எடுத்து கொஞ்ச முடியவில்லை. அமித் ஷாவின் மகனுக்கு குழந்தை பிறந்தது, ஆமதாபாதில். அமித் ஷாவோ, டில்லியில் இருக்கிறார்.ஊருக்கு சென்று பேத்தியைப் பார்க்க ஆசைப்பட்டார், அமித் ஷா. ஆனால், பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் அதிரடிப் படையின் தலைவர், 'நீங்கள்
Amit Shah, Home Minister, SPG, அமித் ஷா, பேத்தி

புதுடில்லி: உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு, இரண்டாவது பேரக் குழந்தை பிறந்துள்ளது. தாத்தாவான அமித் ஷா, தன் பேத்தியை கையில் எடுத்து கொஞ்ச முடியவில்லை. அமித் ஷாவின் மகனுக்கு குழந்தை பிறந்தது, ஆமதாபாதில். அமித் ஷாவோ, டில்லியில் இருக்கிறார்.

ஊருக்கு சென்று பேத்தியைப் பார்க்க ஆசைப்பட்டார், அமித் ஷா. ஆனால், பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் அதிரடிப் படையின் தலைவர், 'நீங்கள் ஊருக்குப் போகக் கூடாது' என, அமித் ஷாவிற்கு கட்டளையிட்டு விட்டார். 'குஜராத்தில், குறிப்பாக ஆமதாபாதில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில், பேரக்குழந்தையை பார்க்க, ஆமதாபாத் சென்றால், அமித் ஷாவிற்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.


latest tamil news



'தினமும் பிரதமர் மோடியைச் சந்தித்து பேசுபவர், அமித் ஷா. இதனால், பிரதமருக்கும் பிரச்னை ஏற்படும்' என, மோடிக்கு பாதுகாப்பு அளிக்கும், எஸ்.பி.ஜி., அமைப்பு கறாராக கூறிவிட்டது. இதனால், பேத்தி பாசத்தை, தற்போதைக்கு தள்ளி வைத்துள்ளார், அமித் ஷா. இருப்பினும், தினமும் காலையில், வீடியோ மூலமாக பேத்தியைப் பார்த்துவிட்டு தான், வேலைகளைத் துவங்குகிறாராம் அமித் ஷா.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murthy - Bangalore,இந்தியா
22-ஜூன்-202020:18:13 IST Report Abuse
Murthy எனக்கு பிஜேபி கொள்கையில் உடன்பாடு இல்லை, ஆயினும் நீங்கள் பேத்தியை பார்க்க போகாமல் இருப்பது வருத்தம் தான். நிலைமை சீரானவுடன் சென்று பாருங்கள்... அதுவரை வீடியோவில் பார்த்து மகிழுங்கள்.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
22-ஜூன்-202019:40:49 IST Report Abuse
வெகுளி அநேகமாக இது சுய கட்டுப்பாட்டுடன் அமித்ஷாவே எடுத்த முடிவாகத்தான் இருக்கணும்..
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
22-ஜூன்-202016:27:33 IST Report Abuse
Endrum Indian என்ன பண்றது இது காலத்தின் கட்டாயம் இருக்கவே இருக்கு வாட்ஸாப்ப், நமஸ்தே பாரத் (ஜூம் வேண்டாம் உரிமையாளர் சீனர்) அதை வைத்துக்கொண்டு பேரன் பேத்தியோடு கொஞ்சம் பேசலாம். நாங்களும் அதை தானே செய்கின்றோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X