பொது செய்தி

தமிழ்நாடு

'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம்: பசுமை ஆர்வலர்களின் சாதனை!

Updated : ஜூன் 22, 2020 | Added : ஜூன் 22, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
திருப்பூர்:''வனத்துக்குள் திருப்பூர், திட்டத்தில், எட்டு லட்சம் மரக்கன்று நட்டு, பராமரிப்பது, பசுமை ஆர்வலர்கள் ஒவ்வொருவரின் வாழ்நாள் சாதனை,'' என, கலெக்டர் விஜய கார்த்திகேயன் பேசினார்.'வனத்துக்குள் திருப்பூர் -6' திட்டம் துவக்க விழா, திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே வயக்காட்டுப்புதுாரில், ஸ்டார் மணி தோட்டத்தில், நேற்று நடந்தது. சிறப்பு வழிபாடுடன், மரக்கன்று
K Vijay Karthikeyan, tirupur, tamil news,
வனத்துக்குள் திருப்பூர்,  பசுமை ஆர்வலர், சாதனை!

திருப்பூர்:''வனத்துக்குள் திருப்பூர், திட்டத்தில், எட்டு லட்சம் மரக்கன்று நட்டு, பராமரிப்பது, பசுமை ஆர்வலர்கள் ஒவ்வொருவரின் வாழ்நாள் சாதனை,'' என, கலெக்டர் விஜய கார்த்திகேயன் பேசினார்.

'வனத்துக்குள் திருப்பூர் -6' திட்டம் துவக்க விழா, திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே வயக்காட்டுப்புதுாரில், ஸ்டார் மணி தோட்டத்தில், நேற்று நடந்தது. சிறப்பு வழிபாடுடன், மரக்கன்று நடும் விழா துவங்கியது.


latest tamil news



கலெக்டர் விஜய கார்த்திகேயன், முதல் மரக்கன்றை நட்டு, பேசியதாவது:திருப்பூர் என்றாலே,'வனத்துக்குள் திருப்பூர்' என்று கூறும் அளவுக்கு, இந்தியாவிலேயே பெரிய திட்டமாக, வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் பங்கெடுத்த ஒவ்வொருவரின் வாழ்நாள் சாதனை இது.கடந்த ஐந்து ஆண்டுகளில், எட்டு லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பது சாதாரண விஷயம் அல்ல. 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினரின் கூட்டு முயற்சியே, வெற்றிக்கான சூத்திரம். 'தினமலர்' நாளிழின் பசுமைப்பணியும் பாராட்டுக்குரியது.திருப்பூரிலுள்ள நஞ்சராயன் குளத்துக்கு வெளிநாட்டிலிருந்து பல்வேறு வகையான பறவைகள் இந்த குளத்துக்கு வலசை வருகின்றன. எனவே, பறவைகள் சரணாலயம் அமைக்க, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.

நிகழ்ச்சி, சமூக இடைவெளியுடன் நடத்தப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் முக கவசம், கை கழுவ கிருமிநாசினி வழங்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
veeraraghavan - thiruvarur,இந்தியா
23-ஜூன்-202008:56:24 IST Report Abuse
veeraraghavan வனத்துக்குள் திருப்பூர் கடந்த ஐந்து ஆண்டுகளில், எட்டு லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பது சாதாரண விஷயம் அல்ல. வாழ்த்துகள் திருப்பூரிலுள்ள நஞ்சராயன் குளத்துக்கு வெளிநாட்டிலிருந்து 🕊️🦩🦜 பல்வேறு வகையான பறவைகள் இந்த குளத்துக்கு வலசை வருகின்றன. எனவே, பறவைகள் சரணாலயம் அமைக்க , அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. திருப்பூர் காவிரியில் இணையும் நொய்யலாற்றின் நீர்பிடிப்பு பகுதி. இலட்சம் மரங்களால் பெறப்படும் மழை காவிரிபாசனத்திற்கு மிகவும் உதவும் நல்லார் ஒருவர் உளரே அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
22-ஜூன்-202021:08:59 IST Report Abuse
Vijay D Ratnam முயற்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை. என் வனத்திற்குள் சென்னையை உருவாக்க முடியாதா?
Rate this:
Cancel
PR Makudeswaran - Madras,இந்தியா
22-ஜூன்-202015:24:02 IST Report Abuse
PR Makudeswaran அரசியல்வாதிகளின் பங்களிப்பால் எதுவுமே பூப்படையாது. இது உலகறிந்த உண்மை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X