வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நீதி வேண்டும்: மன்மோகன்

Updated : ஜூன் 22, 2020 | Added : ஜூன் 22, 2020 | கருத்துகள் (86) | |
Advertisement
புதுடில்லி: லடாக்கில் சீன வீரர்கள் தாக்கியதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்ததற்கு நீதி கிடைக்க வேண்டும். இதற்காக நடவடிக்கை எடுக்கவிட்டால், அது வரலாற்று பிழை ஆகிவிடும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, மன்மோகன் சிங் வெளியிட்ட அறிக்கை: கடந்த 15ம் தேதி லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நமது ராணுவ வீரர்கள் 20 பேரை
manmohan singh, pm modi, india, china, border dispute, மன்மோகன், மன்மோகன்சிங், முன்னாள் பிரதமர்,லடாக், சீனா, ராணுவம், வீரமரணம், நீதி, வரலாற்று துரோகம்,

புதுடில்லி: லடாக்கில் சீன வீரர்கள் தாக்கியதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்ததற்கு நீதி கிடைக்க வேண்டும். இதற்காக நடவடிக்கை எடுக்கவிட்டால், அது வரலாற்று பிழை ஆகிவிடும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மன்மோகன் சிங் வெளியிட்ட அறிக்கை: கடந்த 15ம் தேதி லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நமது ராணுவ வீரர்கள் 20 பேரை இழந்து நிற்கிறோம். தேசத்திற்காக தங்கள் சேவையின் போது உயிர் தியாகம் செய்துள்ளனர். தேசத்திற்காக தங்கள் சேவையின் போது, உயிர் தியாகம் செய்திருக்கின்றனர்.
தங்களுடைய கடைசி மூச்சிருக்கும் வரை தாய்நாட்டை காக்க போராடியுள்ளனர். இதற்காக வீரமரணம் அடைந்த வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம். எல்லையில், நாட்டின் இறையாண்மையை காப்பதற்காக போராடி இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததற்கு, நீதி கிடைப்பதை பிரதமரும், இந்திய அரசும் உறுதி செய்ய வேண்டும்.


latest tamil news
இந்திய அரசு எடுக்கும் முடிவுகள் மற்றும் நடவடிக்கைகள் அடிப்படையில் தான், எதிர்காலத்தில், நமது சந்ததியினர், நம்மை தெரிந்து கொள்கின்றனர். நமது ஜனநாயகத்தில், அனைத்து முடிவுகளையும் எடுக்க வேண்டிய இடத்தில் பிரதமர் அலுவலகம் உள்ளது. இதனால், தேசத்தின் நலன் குறித்த தனது வார்த்தைகள் மற்றும் முடிவுகளையும் பிரதமர் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் சோ ஏரியை சட்டவிரோதமாக உரிமை கோரும் சீனா, அங்கு ஏப்ரல் மாதம் முதல் ஊடுருவி வருகிறது.
இது போன்ற அச்சுறுத்தலுக்கு இடம்கொடுத்து, அந்த பிராந்தியத்தின் இறையாண்மைக்கு சமரசம் செய்து கொள்ளக்கூடாது. தற்போதுள்ள பிரச்னையை கையாளவும், அதனை மேலும் பெரிதாக்காமல் இருப்பதற்காக அரசின் அனைத்து துறைகளும் இணைந்து செயல்படுவதை பிரதமர் உறுதி செய்ய வேண்டும்.

இந்த அச்சுறுத்தலை முறியடிக்க நாம் அனைவரும் ஒரே தேசமாகவும், ஒற்றுமையாகவும் இருக்க வேண்டிய நேரம். தவறான தகவல் அளிப்பது சிறந்த தலைமைக்கு அழகல்ல. தவறான தகவல்கள் மூலம் உண்மையை மறைக்க முடியாது. வெளியில் இருந்து வரும் அச்சுறத்தலை தைரியமாக எதிர்க்க வேண்டும். ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்காவிடில், அது வரலாற்று துரோகம் ஆகிவிடும். இவ்வாறு அந்த அறிக்கையின் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan D - Coimbatore,இந்தியா
28-ஜூன்-202019:15:47 IST Report Abuse
Nagarajan D காங்கிரசுக்கு திதி கொடுத்துவிட்டு மாற்றத்தை பேசுங்க முன்னாள் பிரதமரே
Rate this:
Cancel
Gopalakrishnan Thyagarajan - Kuwait City,லிபியா
28-ஜூன்-202014:11:37 IST Report Abuse
Gopalakrishnan Thyagarajan Only in his time soldiers heads were cut and thrown. What action was taken by Him??
Rate this:
Cancel
Gopalakrishnan Thyagarajan - Kuwait City,லிபியா
28-ஜூன்-202014:10:05 IST Report Abuse
Gopalakrishnan Thyagarajan மாம்ஸ் ப்ரிமேமினிஸ்டரா இருக்கும்போது தான் ராணுவ வீரர் தலை வெட்டினார்கள். நீ அப்போ என்ன பண்ணே ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X