தமிழகத்தில் 62 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு; இதுவரை 794 பேர் பலி

Updated : ஜூன் 22, 2020 | Added : ஜூன் 22, 2020 | கருத்துகள் (3)
Advertisement
சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூன் 22) ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 62,087 ஆகவும், பலி எண்ணிக்கை 794 ஆகவும் அதிகரித்துள்ளது.தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 2,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 58 பேர் வெளிமாநிலங்கள்
CoronaVirus, CoronaCases, Tamilnadu, Discharge, TN_CoronaUpdates, TN_Health, TN_FightsCorona, Corona, TNGovt, Covid-19, PositiveCases, தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு, உயிரிழப்பு, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூன் 22) ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 62,087 ஆகவும், பலி எண்ணிக்கை 794 ஆகவும் அதிகரித்துள்ளது.



தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 2,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 58 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 62,087 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 87 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 26,592 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 9,19,204 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.


latest tamil news



இன்று அரசு மருத்துவமனையில் 30 பேரும், தனியார் மருத்துவமனையில் 7 பேரும் என 37 பேர் உயிரிழந்ததை அடுத்து, தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 794 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,358 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 34,112 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 27,178 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
23-ஜூன்-202009:12:40 IST Report Abuse
Chandramoulli இதில் பாதிப்பு அடைந்தவர்கள் சென்னை வாசிகள். இதில் மதம் முக்கிய கடமையை செய்து உள்ளது. கோயம்பேடு காய்கறி, பழ வகைகள், ராயபுரம் மீன் மார்க்கெட், மற்றும் இறைச்சி கடைகள் முக்கியம். இவற்றை சாப்பிடாமல் இருந்தால் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்று நினைத்து எல்லோரும் விதிமுறையை காற்றில் பறக்க விட்டு அவர்களே அவர்களின் வாழ்க்கைக்கு ஆப்பு அடித்து கொண்டு உள்ளனர். முக்கால் வாசி பாதிக்கப்பட்டவ்ர்கள் சென்னை வாசிகள் . கிராமப்புறங்கள் மக்கள் அரசின் அறிவுரையை முழுமையாக பின்பற்றியவர்கள் . சென்னை மக்கள் தேர்தலுக்கு வாக்கு போட வர மாட்டார்கள் . விடுமுறையை அனுபவிக்க சுற்றுலா செல்வார்கள் . அரசின் எந்த அறிவுரையையும் தேர்தல் / வைரஸ் நோய் நேரத்தில் பின்பற்ற மாட்டார்கள் . அரசை குறை சொல்லி ஒரு பயனும் இல்லை .
Rate this:
P. SIV GOWRI - Chennai,இந்தியா
23-ஜூன்-202014:13:54 IST Report Abuse
P. SIV GOWRIஇதில் பாதிக்கபடுபவர்கள் வீட்டில் உட்கார்ந்த கொண்டு இருக்கும் நாங்கள். இவ்ர்கள் இஷ்டம் போல் ஊர் சுற்றட்டும்....
Rate this:
Cancel
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
23-ஜூன்-202007:59:30 IST Report Abuse
R.Kumaresan வைரஸ், வைரஸ் நோய் பரவல், ஊரடங்கு உத்தரவு..R.Kumaresan. வைரஸ், வைரஸ் நோய் பரவல் தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு போட்டு 794 பேர் பலியாயியுள்ளனர் அதிகம்தான்..R.Kumaresan.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X