பொது செய்தி

இந்தியா

பிகார் மாநில எல்லையில் அணை கட்டுமானத்தை நிறுத்தியது நேபாளம்

Updated : ஜூன் 22, 2020 | Added : ஜூன் 22, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி: பிகார் நேபாள எல்லையில் உள்ள கன்டாக் அணை கட்டுமானப் பணியை நேபாள அரசு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.பிகார் மாநிலத்தில் இந்திய நேபாள எல்லை அருகே இந்தியாவுக்குள் அமைந்துள்ள கன்டாக் அணையின் கட்டுமான பணிகளை நிறுத்துமாறு நேபாள அதிகாரிகள் கூறியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.பிகாரின் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் ஓடும் லால் பேக்கியா

புதுடில்லி: பிகார் நேபாள எல்லையில் உள்ள கன்டாக் அணை கட்டுமானப் பணியை நேபாள அரசு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

பிகார் மாநிலத்தில் இந்திய நேபாள எல்லை அருகே இந்தியாவுக்குள் அமைந்துள்ள கன்டாக் அணையின் கட்டுமான பணிகளை நிறுத்துமாறு நேபாள அதிகாரிகள் கூறியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.latest tamil newsபிகாரின் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் ஓடும் லால் பேக்கியா நதியில் அமைந்துள்ள கன்டாக் அணையில் கட்டுமானப் பணிகளை பிகார் மாநில நீர்வளத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அதில் ஒரு பகுதி தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி நேபாள அதிகாரிகள் பணியை தடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து பிகார் மாநில நீர்வளத்துறை அமைச்சர் சஞ்சய் ஷா கூறியதாவது, ' கன்டாக் அணை 36 மதகுகளை கொண்டது, அவற்றில் 18 மதகுகள் நேபாளத்தின் பகுதியில் அமைந்துள்ளது. அப்பகுதியில் இருந்து தான் கட்டுமானத்திற்கு தேவையான பொருளை பெற முடியும். ஆனால், அப்பகுதிக்கு செல்ல முடியாமல் தடைகளை ஏற்படுத்தி உள்ளனர். நேபாளம் தடுக்கும் பகுதியில் வசிப்பிடம் எதுவும் கிடையாது. பல இடங்களில் அவர்கள் பணிகளை செய்ய விடாமல் தடுத்துள்ளனர். அணை கட்டுமானப் பணியை தடுத்துள்ளதால் பிகார் மாநிலத்திற்கு வெள்ள அபாயம் உள்ளது. இது போல் பிரச்னை வருவது இது தான் முதல் முறை' இவ்வாறு அவர் கூறினார்


latest tamil newsஇப்பிரச்னை குறித்து மத்திய உள்த்துறை அமைச்சகத்திற்கும், நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் பிகார் மாநில அரசு தகவல் அளித்துள்ளது. இந்திய பகுதிகளை உள்ளடக்கிய நேபாளத்தின் புதிய அரசியல் வரைபடத்திற்கு அந்நாட்டு பார்லிமென்ட் ஒப்புதல் வழங்கிய சில நாட்களில் இந்தியா உடனான எல்லையில் பிரச்னையை ஏற்படுத்தும் நேபாளத்தின் திட்டம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkata achacharri - india,இந்தியா
25-ஜூன்-202011:43:51 IST Report Abuse
venkata achacharri இதில் வேடிக்கை என்னவெனில் பங்களேஸ் ஐ பிரித்து ஈஸ்ட் பாக்கிஸ்தான் என்ற நாட்டையே இல்லாமல் செய்து சீனாவை பாகிஸ்தானை எதிர் கொண்டு போர் நடத்தி இந்தியாவை காப்பாத்த முன் நின்றவர்களை தேச துரோகி என்று பட்டம் சூட்ட மட்டும் தெரிவது
Rate this:
Cancel
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் THERE IS AN INDIAN MILITARY REGIMENT WITH 50 000 GORGAS
Rate this:
Cancel
SanDan - NYK,யூ.எஸ்.ஏ
23-ஜூன்-202006:07:27 IST Report Abuse
SanDan Why cant India air-freight construction items and continue the construction It'll cost more but we would have achieved our goal and would have proved a point to Nepal and China
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X