சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

அலறப் போகுது சமாஜ்வாதி!

Added : ஜூன் 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 அலறப் போகுது சமாஜ்வாதி!


அலறப் போகுது சமாஜ்வாதி!


'சமாஜ்வாதி கட்சியிலிருந்து, பா.ஜ.,வுக்கு தாவுவதற்கு, ஒரு முக்கிய பிரமுகர் தயாராகி வருகிறார்' என, 'பொடி' வைத்து பேசுகின்றனர், உத்தர பிரதேச மாநில அரசியல்வாதிகள். இந்த மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. வரும், 2022ல், இங்கு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. அதற்குள் அதிரடியாக எதையாவது செய்து, எதிர்க்கட்சிகளை கலகலக்க வைக்க வியூகம் வகுத்து வருகிறார் ஆதித்யநாத். அவரது வலையில் முதலில் சிக்கியிருப்பது, சமாஜ்வாதி நிறுவனரான முலாயம் சிங் யாதவின் இளைய மருமகள் அபர்ணா. முலாயம் சிங்கின் மூத்த மகனும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவின் மனைவி தான், இந்த அபர்ணா. அகிலேஷ் யாதவுக்கும், பிரதீக்கிற்கும் ஒரு சில விஷயங்களில் கருத்து வேறுபாடு அதிகம். அபர்ணாவின் புண்ணியத்தில், இந்த கருத்து வேறுபாடு, பெரும் விரிசலாக மாறி விட்டது. அபர்ணா, துவக்கத்திலிருந்தே, பா.ஜ.,வுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபத்தில், இவரது பாதுகாப்புக்காக, 11 போலீசார் அடங்கிய சிறப்பு குழுவை நியமித்தார், முதல்வர் யோகி ஆதித்யநாத். கோசாலை அமைத்து, ஏராளமான பசுக்களையும் பராமரித்து வருகிறார் அபர்ணா. அவரை, பா.ஜ., வில் சேர்ப்பதற்கான, 90 சதவீத வேலைகள் முடிந்து விட்டன. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு, ஒரு சில மாதங்களுக்கு முன், அவரை கட்சியில் சேர்த்து, சமாஜ்வாதி தலைவர்களை அலற வைக்க திட்டமிட்டுள்ளார்
ஆதித்யநாத்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
l vijayaraghavan - CHENNAI,இந்தியா
23-ஜூன்-202017:15:20 IST Report Abuse
l vijayaraghavan கட்சி நிறுவனர் முலயமோ வயது மூப்பு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி முடங்கியுள்ளார். அகிலேஷ் கையில் கட்சி துவண்டு கிடக்கிறது. அங்கு ஆக்ஷன் என்பதே இல்லை. மஹாகத்தான் பந்தன் வேலைக்கு ஆக வில்லை.இது ஒரு துவக்கம் தான். சமாஜ்வாதி கலகலக்கத் தான் போகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X