சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

'மப்பில்' தள்ளாடும் போலீஸ் ஸ்டேஷன்!

Added : ஜூன் 22, 2020
Share
Advertisement



பேச்சு, பேட்டி, அறிக்கை


'பரவாயில்லை... கொஞ்சம் முன்னேறி இருக்கிறீங்க... பேசுறது புரிய ஆரம்பிக்குது... ஆனா, இப்படி பேசிப் பேசி ஒருத்தர், 'சுடலை'ன்னு பேரு வாங்கினாரு... உங்களுக்கு வறுகடலைன்னு பேரு வச்சிரப் போறாங்க... பார்த்துக்குங்க...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், மக்கள் நீதி மையம் கட்சி தலைவர், நடிகர் கமல் அறிக்கை: அனைத்து கட்சி கூட்டத்தில், பிரதமர் கூறியிருக்கும் கருத்து, வெளியுறவு துறை அமைச்சரின் அறிக்கைக்கு முரண்பட்டு இருக்கிறது. தெளிவான சிந்தனை தேவைப்படும் போதெல்லாம், உணர்வுகளை துாண்டி விட்டு தப்பிக்க முயல்வதை, பிரதமரும், அவரது சகாக்களும் நிறுத்த வேண்டும். ஒவ்வொரு முறையும் கேள்வி கேட்பவர்களை, தேசத்திற்கே விரோதியைப் போன்ற, ஒரு பிம்பத்தை உருவாக்கி விடுகிறார்.

'கொரோனா ஒழிப்பு பணியில், கலெக்டர்களுக்கு அதிகாரம் கொடுத்த முதல்வர், அப்படியே, உங்களுக்கும் கொஞ்சம் அதிகாரம் கொடுத்தால் நன்றாக இருந்திருக்கும்' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக, வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் வீரமணி பேட்டி: தமிழகத்தில், 20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட சூழ்நிலைக்கேற்ப, கொரோனா தொற்றை தடுக்க, தேவையான நடவடிக்கை எடுக்க, கலெக்டர்களுக்கு முதல்வர் அதிகாரம் வழங்கிஉள்ளார்.

'நீங்கள் சொல்வது, உங்கள் அப்பா தலைமையிலான, தி.மு.க.,வில் இருந்த நிலைமை பற்றி. இப்போது இருப்பது உங்கள் அண்ணன் தலைமையிலான, தி.மு.க., அங்கு, பேச்சு சுதந்திரம் இல்லை என்பதே கட்சியினர் கருத்தாக உள்ளது என்பதை நினைவுபடுத்தத் தோன்றும் வகையில், தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேச்சு: கருத்து சுதந்திரத்தை அனைவருக்கும் பெற்று தந்ததில், கருணாநிதிக்கு முக்கிய பங்கு உண்டு. அவரவருக்கு விருப்பமான எதிர்கருத்துகளை, தி.மு.க., ஆட்சியில் எல்லாராலும் சொல்ல முடிந்தது. இப்போது அந்த நிலை சுருங்கிக் கொண்டே வருகிறது.

'இப்போது தான், ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர்களாக வலியுறுத்தி வருகின்றனர். பெரிய அளவில் வலியுறுத்தப்பட்டதும், தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும்...' என, கூறத் தோன்றும் வகையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் அறிக்கை: கொரோனா பிரச்னையால், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வை ரத்து செய்து, அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது, வரவேற்கத்தக்கது. தமிழக அரசின் இந்த உத்தரவு, தமிழகம் தவிர, பிற மாநிலங்களில், தமிழ் வழிக் கல்வியில் பயிலும், எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கும் பொருந்துமா?

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X