பொது செய்தி

இந்தியா

சீனாவுடனான எல்லைப் பகுதியில் தொடர் பதற்றம்!

Updated : ஜூன் 22, 2020 | Added : ஜூன் 22, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
சீனா , எல்லைப் பகுதி, தொடர் பதற்றம்! border tension, India,  China, border dispute, galwan valley, ladakh, india-china border

புதுடில்லி : இந்திய - சீன எல்லையில், இரு நாடுகளும் ராணுவத்தினரையும், தளவாடங்களையும் குவித்து வருவதால், பதற்றமான சூழல் நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

'சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டால், உடனே பதிலடி கொடுக்கலாம்' என, ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதால், முப்படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். இந்திய - சீன எல்லையில், கடந்த சில மாதங்களாகவே பதற்றமான சூழல் நிலவி வந்தது.

நம் நாட்டின் வட கிழக்கு மாநிலங்களிலும், லடாக் பகுதியிலும், சீன ராணுவத்தினர் அத்துமீறலில் ஈடுபட்டு வந்தனர். ஹெலிகாப்டர்களில் பறந்து, எல்லைப் பகுதி யில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.இதற்குப் பதிலடியாக, நம் ராணுவத்தினரும், எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியதுடன், கட்டுமானப் பணிகளையும் மேற்கொண்டனர்.


பதிலடிஇந்நிலையில், 15ம் தேதி, சீன ராணுவத்தினர், நம் வீரர்களை கொடூரமாக தாக்கினர். இதில் நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். பதிலடி தாக்குதலில், சீன வீரர்கள், 43 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதை, சீன ராணுவம் உறுதி செய்யவில்லை. இந்த சம்பவத்துக்குப் பின், இரு தரப்பிலும், ராணுவ அதிகாரிகள் மற்றும் துாதரக அதிகாரிகள் மட்டத்தில் அமைதி பேச்சு நடத்தி வந்தாலும், இரு தரப்புமே எல்லையில் ராணுவத்தையும், தளவாடங்களையும் குவித்து வருவதாக தகவல்

வெளியாகி உள்ளது. இது குறித்து, ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று முன்தினம் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், எல்லையில் அத்து மீறும் சீன ராணுவத்தினருக்கு பதிலடி கொடுக்கும்படி, ராணுவத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டது.மேலும், நிலைமைக்கு ஏற்ப, அந்தப் பகுதிகளில் உள்ள ராணுவ அதிகாரிகளே உடனடியாக எந்த முடிவையும் எடுக்கும் சுதந்திரமும் வழங்கப்பட்டு உள்ளது.இதையடுத்து, நம் ராணுவம், சீன எல்லையில் படைகளை குவித்து வருகிறது.

காஷ்மீரின் லே மற்றும் ஸ்ரீநகரில், ஏற்கனவே போர் விமானங்கள், தாக்குதல் ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் உள்ளன. இதைத் தவிர, எல்லையில் தளவாடங்களும் குவிக்கப்பட்டு உள்ளன; கடற்படையும் முழு உஷார் நிலையில் உள்ளது. சீன ராணுவத்தினர் எந்த வழியில் அத்துமீறினாலும், அதற்கு உடனடியாக பதிலடி கொடுக்க, நம் ராணுவத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீன ராணுவமும் தன் பங்கிற்கு படைகளை குவித்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது. எதிர்தரப்பு நடவடிக்கைகளை, நம் ராணுவம் கண்காணித்து வருகிறது.


சிறப்பு படை

மலைப் பிராந்தியத்தில் போரிடுவது சாதாரண விஷயமல்ல. இரு நாட்டு வீரர்களுக்குமே, அது சவாலான விஷயம் தான். எனவே, மலைப் பிராந்தியத்துக்கு, சாலை மார்க்கமாக வாகனங்களில் வீரர்களை அனுப்பி வருகிறது சீனா. இந்த விஷயத்தில், நம் நாட்டு வீரர்களுக்கு சில சாதகமான அம்சங்கள் உள்ளன. ஏற்கனவே கார்கில் போரின் போது, மலைப் பிராந்தியத்தில் போரிட்டு வென்ற அனுபவம் நமக்கு உண்டு.

உத்தரகண்ட், லடாக், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மலைப் பிராந்தியத்தில், பல ஆண்டுகளாக போர் சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் நம்மிடம் உள்ளனர். இவர்கள் கொரில்லா போர் முறையில் தேர்ச்சி பெற்றவர்கள். சீன ராணுவத்தினருக்கு இந்த அளவுக்கு சாதகமான அம்சங்கள் இல்லை. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.இந்திய - சீன நாடுகளுக்கு இடையே, 1996 மற்றும் 2005ம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி, எல்லையில் உள்ள வீரர்கள், தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற நேரங்களில் துப்பாக்கி, பீரங்கி, வெடிகுண்டுகள் ஆகியவற்றை

பயன்படுத்த முடியாது.


முழு சுதந்திரம்ஆனால், தற்போது சீனா அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதால், எல்லையில் உள்ள இந்திய வீரர்களுக்கு, நம் ராணுவம் முழு சுதந்திரம் கொடுத்து உள்ளது. எனவே, நம் வீரர்கள், இனி துப்பாக்கியை பயன்படுத்துவதற்கு பெரிய அளவில் சிக்கல் ஏதும் இருக்காது என, ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையே, நம் நாட்டின் முப்படை தளபதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இதில், சீன எல்லையில் உள்ள சூழல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.


சமூக வலை தளங்களில்அதிர்ச்சியான கருத்துஇந்திய - சீன எல்லை பிரச்னை குறித்து, முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த சம்பவத்துக்குப் பின், சமூக வலைதளங்களில், இரு நாடுகளைச் சேர்ந்தவர்களும், உணர்ச்சிகளை துாண்டும் விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 'பழிக்கு பழி வாங்க வேண்டும்' என, இரு தரப்பினரும் கூறுகின்றனர்.இரு நாடுகளுக்கு இடையே போர் என்பது, சாதாரண விஷயமல்ல. இரண்டு நாடுகளுமே பலமான ராணுவ கட்டமைப்பை உடையவை. இரு தரப்பிடமும், அணு ஆயுதங்கள் உள்ளன. இந்தியா - சீனா இடையே போர் ஏற்பட்டால், அது, எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என அறியாமல், இது போன்ற கருத்துகளை பதிவிடுகின்றனர்; இதுபோல், இஷ்டத்துக்கு கருத்து பதிவிடுவதை பார்த்தால், அதிர்ச்சியாக உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


தொடரும் பேச்சுஎல்லையில் பதற்றமான சூழல் நிலவினாலும், பதற்றத்தை குறைக்கும் வகையில், இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கும் இடையே, நேற்று பேச்சு நடந்தது. இரு நாட்டு எல்லையில், சீன பகுதிக்குள் உள்ள மொல்டோ என்ற இடத்தில், இந்த பேச்சு நடந்தது. இதில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன. துாதரக அளவிலும், ராணுவ அதிகாரிகள் அளவிலும் இரு தரப்பு பேச்சை தொடர்ந்து மேற்கொள்ளவும், இரு தரப்பும் திட்டமிட்டுள்ளன. இதற்கிடையே, 500 கோடி ரூபாயில், அதி நவீன ஆயுதங்களை வாங்குவதற்கு, ராணுவத்துக்கு, மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்தது. எந்த மாதிரியான ஆயுதங்களை வாங்குவது என்பது குறித்து, முப்படைகளின் தளபதிகள் ஆலோசித்து முடிவு எடுக்கவுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
23-ஜூன்-202017:18:30 IST Report Abuse
மலரின் மகள் சில நிகழ்வுகளில் நீதிமன்றங்கள் ஒதுங்கி இருப்பது நலம். உயர் நீதி மன்றம் நோ என்று சொல்வதும் பிறகு உச்ச நீதி மன்றம் எஸ் என்று சொல்வதும் எதற்காக. மக்கள் நம்பிக்கையில் அரசும் நீதி மன்றங்களும் தடை கற்களாக இருப்பது சரியல்ல. டாஸ்மாக் திறக்க அனுமதி அளிக்கிறார்கள், இறை நம்பிக்கை தேவையற்றது என்கிறார்கள். மின்சாரம் காஸ் போன்றவற்றை பாதுகாப்பாக பயன்படுத்தவில்லையா. அது போல எங்கு சிரமம் இருக்கிறதொ அங்கு பாதுகாப்பை பல படுத்துவது அரசின் தலையாய கடைமை. வெளிநாடு சென்ற இந்தியர்கள் தாயகம் திரும்பினாள் காரோண வந்துவிடும் என்று சொல்லும் அபத்தம் போல எத்துணையோ தவறுகள் இந்த ஆட்சியில் நடக்கிறது. ஜகந்நாதர், சுபத்ரா, பலதேவர் கருணையால் இவர்களின் திறனற்ற ஆட்சி வெளியேறும். வெளியேறவேண்டும். பிரார்த்திப்போம். இவர்கள் ஆட்சி போகும் நாள் சுபிக்ஸம் தானாக வரும் என்றே தோன்றுகிறது. நூறு நாட்களுக்கும் மேலாக பார்த்தாயிற்று பொய் சொல்லி நம்மை ஏமாற்றுகிறார்கள். இந்தியாவிற்கு இந்தியர்கள் திரும்ப கூடாது என்று சொல்லும் எவரும் நாட்டிற்கு தேவையில்லை. அவர்கள் ஆட்சியும் தேவை இல்லை.
Rate this:
Cancel
mrsethuraman - Bangalore,இந்தியா
23-ஜூன்-202017:11:56 IST Report Abuse
mrsethuraman  ஏற்கனவே நாங்கள் கரோனாவினால் கடுப்பில் இருக்கிறோம் .இந்த நேரத்தில் .எல்லையில் வாலாட்டினால் அது சைனாவிற்கு தான் போறாத காலம்.
Rate this:
Cancel
23-ஜூன்-202011:06:16 IST Report Abuse
இராமன் இன்னும் ஒரு மாதத்தில் லடாக்கை கைபற்றுவோம் என்று சீனா அதிகாரி ஒருவன் வெளி நாட்டு பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X