'ரெய்டு' போன அதிகாரிக்கு 'பரேடு' 'கமகம' விருந்தில், அதிகாரிகள் 'செம' கட்டு!

Updated : ஜூன் 23, 2020 | Added : ஜூன் 22, 2020
Share
Advertisement
 'ரெய்டு' போன அதிகாரிக்கு 'பரேடு' 'கமகம' விருந்தில், அதிகாரிகள் 'செம' கட்டு!

வளைய சூரிய கிரஹணத்தை, பிரத்யேக கண்ணாடியில் பார்த்த மகிழ்ச்சியில், சித்ராவும், மித்ராவும், அந்த அறிவியல் நிலைய வளாகத்தில் உள்ள பெரிய மரத்தின் கீழ் அமர்ந்தனர். ''ஏக்கா... ரொம்ப நாளைக்கு அப்புறம் 'கமகம'ன்னு கறி விருந்து போட்டாங்களாம், எதுக்காக?''ஆரம்பித்தாள் மித்ரா.

''ஆமாம் மித்து. ஆய்வு கூட்டத்தில், மினிஸ்டர் கலந்துட்டதால, 'நான் வெஜ்'அயிட்டங்களுக்கு ஆர்டர் கொடுத்துட்டாஙகளாம். கொரோனா நேரத்துல, 200 பேர் வச்சு கூட்டம் போட வேண்டாமுன்னு, கடைசி நேரத்துல, சட்டுபுட்டுனு, கூட்டத்த முடிச்சுட்டாங்க''''ம்... அப்புறம்'' ''வேற ஏதோ வேல இருக்குனு, மினிஸ்டர் வகையறாவும், போயிட்டாங்க. பிறகென்ன, ஒரே தடபுடல் விருந்துதான். அதிகாரிகளே ஒரு கை பாத்துட்டாங்களாம்,''''ஆக, ஒவ்வொரு ஆய்வு கூட்டத்துக்கும், 'செம' விருந்துபோல,'' சிரித்தாள் மித்ரா.

''ஏன்டி மித்து, கொரோனா, கன்ட்ரோல் இருக்குதா?''''பரவால்லீங்க்கா. ஆனா, ரேஷன் கடையில பிரச்னை தீரவே இல்லையாம்...''''அங்க என்ன பிரச்னை?''''அக்கா, ஊரடங்கு கடுமையா இருந்தப்ப, 500 ரூபாய்க்கு மளிகை பொருள் தொகுப்பு வழங்கப்படும்னு அறிவிச்சாங்க.. திருப்பூர் பகுதி ரேஷன் கடையில, மே கடைசி வாரம்தான் வந்திருக்கும் போல. அதனால, கிராமத்து கடைகளுக்கு அனுப்பிட்டாங்க,''
''சரியாக விக்காததால, நீங்களே பணத்த கட்டுங்கனு, ரேஷன் கடை ஊழியர்களை நெருக்கிட்டாங்க. அவங்களும், தெரிஞ்சவங்கிட்ட வித்துட்டு இருக்காங்களாம்,''''அதிகாரி எப்பவுமே இப்டித்தான். அவங்க ஈஸியா தப்பிச்சுவாங்க. கடைசியில இருக்கிறவங்கதான் மாட்டிக்கிறாங்க,'' என்ற சித்ரா, ''மகளிர் திட்டத்துல, கோடிக்கணக்குல கடன் கொடுக்கறோம்னு சொல்றாங்க... அது யாருக்கு போய் சேருதுனு யாருக்குமே தெரியலை,'' அடுத்த மேட்டாருக்கு தாவினாள்.

''இருக்கலாம்ங்க்கா...''''மாவட்ட அளவில், குழுக்களுக்கு கடன் கொடுத்தாச்சுன்னு சொல்றாங்க. கட்சிக்காரங்க சப்போர்ட் இல்லைன்னா, விண்ணப்ப படிவம் கூட கிடைப்பதில்லையாம். அதேமாதிரி, கொரோனா கடனுதவியும், வார்டு நிர்வாகிகள் நினைச்ச ஆட்களுக்கு மட்டும்தான் போயிட்டு இருக்காம். கலெக்டர், இதையெல்லாம், ஒரு நாளைக்கு ஆய்வு செஞ்சாருன்னா பரவாயில்லை,'' என்றாள் மித்ரா.

''பேசாம இதுக்கு, எக்ஸாமே நடத்தியே இருக்கலாம்,'' என சித்ரா சொன்னதற்கு, ''அக்கா... டென்த் எக்ஸாம் பத்தி சொல்றீங்கன்னு தெரியுது. புரியற மாதிரி சொல்லுங்க,'' என்றாள் மித்ரா.'' தாராபுரம் ரோட்டிலுள்ள ஒரு பிரைவேட் ஸ்கூலில், ஸ்டூடன்ஸை, வீட்டிலேயே எக்ஸாம் எழுத வச்சாங்கன்னு, புகார் வந்துச்சு. சி.இ.ஓ.,வும், சம்பந்தப்பட்ட ஸ்கூலுக்கு போய் விசாரிச்சிட்டு, கண்டிப்பா ஆக்ஷன் உண்டு'ன்னு சொல்லியிருக்காரு. பாக்கலாம் என்ன நடக்குதுன்னு,'' விளக்கினாள் சித்ரா.

அப்போது நீதித்துறை என்ற ஸ்டிக்கருடன் ஒரு ஜீப் வந்தது.அதைப்பார்த்தவுடன் மித்ரா, ''அக்கா... டிஸ்டிரிக்ட் கோர்ட்டில் பணியாற்றும் அலுவலர், ஊழியர்கள் மீது தொடர்ந்து சென்னை ஐகோர்ட் பதிவாளருக்கு பெட்டிஷன் போகுதாம். ஏதாவது, ஒரு ஊழியர் பேர் போட்டு அனுப்புவது அடிக்கடி நடக்குதுன், கோர்ட் ஊழியர்கள் புலம்புறாங்களாம்,'' ''இது குறித்து விசாரித்து அறிக்கை அனுப்புமாறு, பி.டி.ஜே.,க்கு உத்தரவு வருவதும், விசாரணை நடப்பதும், தொடர்கதை போல ஆகி விட்டது,'' என்று கூறினாள்.

''நீதித்துறைக்கும் பெட்டிஷன் போடறாங்களா? பலே...,'' என்ற சித்ரா, ''அந்த துறைதான் வேணும்னு அடம்பிடிச்சு வாங்கிட்ட அதிகாரிய பத்தி தெரியுமா?''''ம்... ம்... சொல்லுங்க. கேட்டு தெரிஞ்சுக்கறேன்,''''சமீபத்தில், லிங்கேஸ்வரர் ஊரிலிருந்து டிரான்ஸ்பரில் வந்த அதிகாரி ஒருத்தர், மதுவிலக்கு கேட்டிருக்கார். கிடைக்கலை. நேரா, பெரிய அதிகாரிகிட்ட போய், 'மினிஸ்டர் சொல்லிட்டார். குடுங்க'ன்னு கேட்டதற்கும் கொடுக்கலை. அதிகாரி, மினிஸ்டர்கிட்ட சொல்ல, அவரும் சொல்லிட்டார்.

உடனே, கேட்ட இடத்தில டியூட்டி போட்டுட்டாங்க,''''அடேங்கப்பா, பெரிய ஆள்தான். அக்கா... வீட்டுக்கு போற வழியில புக்ஷாப்பில் நிறுத்துங்க. 'இளங்கோ'வடிகள் எழுதிய சிலப்பதிகாரம் புக் வாங்கோணும்,''''வாங்கிட்டா போச்சு,'' சொன்ன சித்ரா, ''மசாஜ் சென்டரில் ரெய்டு போன அதிகாரிக்கு செம டோஸ் கிடைச்சுதாம்,''''அச்சச்சோ...''''சிட்டியிலுள்ள ஒரு அதிகாரி, 'மசாஜ் சென்டரில்' ரெய்டுக்கு போயிருக்கார். அடுத்த அரை மணி நேரத்திலேய, 'அங்க எதுக்குய்யா போனீங்க? எந்த எவிடன்சும் இல்லாம, எப்படி நடவடிக்கை எடுக்கறதுன்னு, பெரிய அதிகாரி வெளுத்து வாங்கிட்டாராம்.

இதனால், அப்செட்டாகி, யார்கிட்ட பேசாம, வடக்கு பார்த்து உட்கார்ந்திருக்காராம்,''''போனாலும் தப்பு... போகாட்டியும் தப்பு'னா, என்னதான் பண்றதாம்,'' சலித்து கொண்டாள் மித்ரா.''அட... மித்து, அதிகாரின்னா அப்டித்தான் இருப்பாங்க. உனக்கு தெரியாததா? காளைக்கு புகழ் பெற்ற ஊரில் உள்ள மதுக்கடைகளில், 'பார்' சக்கைப்போடு போடுதாம்.

எல்லாத்துக்கு நல்ல கவனிப்பாம். மேலிடத்துக்கு விஷயம் போகாம இருக்க, ஒற்றர் படைக்கும் 'மொய்' வக்கறாங்களாம்,''''அக்கா... அதே ஊரில், பஞ்சாயத்து தலைவரோ மகன், சேவல் கட்டில் ஈடுபட்டு, போலீசிடம் மாட்டிட்டாரு. அப்புறமென்ன, வழக்கம் போல பேரம் பேசி, 'மேட்டரை' வாங்கிட்டு, கண்டுக்காம விட்டுட்டாங்க,'' என்ற மித்ராவிடம், ''சரி.. மித்து, கிளம்பலாமா?'' சித்ரா சொல்லி எழுந்தாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X