புதுடில்லி: ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு தானியங்களை மேலும் 3 மாதங்களுக்கு வழங்க வேண்டும் என காங். மூத்த தலைவர் சோனியா பிரதமருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதம், டுவிட்டரில் வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது “கொரோனா தொற்றைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், இந்தியாவின் ஏழை எளிய மக்கள் பலரும் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர்.

இவர்களில் அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் அட்டைதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் மாதந்தோறும் வழங்கப்பட்டன. இதில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வராத பிறமாநிலத் தொழிலாளர்களுக்கும் அதே போல நபர் ஒன்றுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் மாதந்தோறும் வழங்கப்பட்டன.
ஏப்ரல் முதல் ஜுன் மாதம் வரை வழங்கப்பட்ட இந்த உணவு தானியங்கள், மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து செப்டம்பர் வரை வழங்க வேண்டும்”பல மாநிலங்கள் இதே கோரிக்கையை விடுத்துள்ளன. எனவே மத்திய அரசு இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும் இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Congress President Sonia Gandhi writes to Prime Minister Narendra Modi urging the Government to extend the provision of free food grains for a period of three months up till September 2020. pic.twitter.com/eH7xVJMsFz
— ANI (@ANI) June 22, 2020
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE