பொது செய்தி

இந்தியா

சுதேசி பொருட்களை வாங்குங்கள்: அமித் ஷா மனைவி வேண்டுகோள்

Updated : ஜூன் 23, 2020 | Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி : மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின், குடும்ப நல சங்க விழாவில் பங்கேற்ற, மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷாவின் மனைவி சோனல் ஷா, சுதேசி பொருட்களை வாங்குங்கள் என, வேண்டுகோள் விடுத்தார்.நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவ படையான, சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின், குடும்ப நல சங்கத்தின் வெள்ளி விழா, நேற்று நடைபெற்றது.இதில், 'வெப் காமிரா' மூலம்,
Amit Shah wife, Sonal Shah, swadeshi products, CAPF, Union Home Minister Amit Shah

புதுடில்லி : மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின், குடும்ப நல சங்க விழாவில் பங்கேற்ற, மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷாவின் மனைவி சோனல் ஷா, சுதேசி பொருட்களை வாங்குங்கள் என, வேண்டுகோள் விடுத்தார்.

நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவ படையான, சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின், குடும்ப நல சங்கத்தின் வெள்ளி விழா, நேற்று நடைபெற்றது.இதில், 'வெப் காமிரா' மூலம், மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷாவின் மனைவி சோனல் ஷா பங்கேற்றார்.

அப்போது, அவர் கூறியதாவது: நாட்டில், சுதேசி பொருட்களை பயன்படுத்த வேண்டும் என, பிரதமர், நரேந்திர மோடி அனைத்து தரப்பினருக்கும் அறிவுறுத்தி உள்ளார். அதனை பின்பற்றி, சி.ஆர்.பி.எப்., உள்ளிட்ட, மத்திய ஆயுத படை பிரிவினரின் குடும்பத்தினர், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, சுதேசி பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


latest tamil newsகொரோனா பாதிப்பிற்கு மத்தியில், சுய உதவி குழுவினரை ஊக்குவிக்கும் வகையில், அவர்களின் தயாரிப்புகளுக்கு, முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.நாடு முழுவதும், 10 லட்சம் சி.ஆர்.பி.எப்., வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள், 50 லட்சம் பேரும், அவர்களுக்கான 'கேன்டீன்'களில், சுதேசி பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்ட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில், லடாக்கில், சீன ராணுவத்தினருடன் நடந்த மோதலில், வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு, அவர் அஞ்சலி செலுத்தினார்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
23-ஜூன்-202017:59:46 IST Report Abuse
Rajas இருந்த எல்லா சிறு இந்திய கம்பனிகளையும் தவறான அரசாங்க கொள்கைகளால் நாசம் செய்தாகி விட்டது. இன்னொரு பக்கம் எதையும் புரிந்து கொள்ளாத நிதி அமைச்சர். எந்த பொருளுக்கு என்ன வரி என்றே புரியாமல் தாறுமாறாக வரி விதித்து மொத்த வளர்ச்சியையும் நாசம். ஒரு உதாரணம் GST யில் 15 % வரை வரியை கொடுத்த வாகன உற்பத்தி துறைக்கு எந்தவித சலுகைகளையும் கொடுக்காததால் (20 லட்சம் கோடியிலும் ஒன்றுமில்லை) அதன் உற்பத்தி அதல பாதாளத்திற்கு போய் இப்போது அரசுக்கு அங்கே இருந்து எந்தவிதமான வரி வசூலும் இல்லை. இதை போல ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சி என்பதே இல்லை. அப்புறம் எப்படி இந்திய கம்பனிகள் வளரும்.
Rate this:
Cancel
Ramesh Kumar - Chennai,இந்தியா
23-ஜூன்-202017:25:56 IST Report Abuse
Ramesh Kumar இது ஒரு நடிப்பு. இப்படி பேசி மக்களை உசுப்பேற்றிவிட்டு, தேச பக்தி இருக்கின்ற மாதிரி நடிக்கின்றீர்கள். அரசு உங்களிடம் தான் இருக்கிறது. சீனா பொருளை நீங்களே தடை போடலாம். அதற்கு சிக்கல் இருந்தால் சீனாக்காரர்களுக்கு புது பிசினெஸ் ஒப்பந்தம் போடாமல் இருக்கலாம். சீனாவிடம் நீங்கள் ஒட்டி உறவாடப்போவதை, மக்களாகிய நாங்கள் எல்லாம் வெகு விரைவில் பார்க்கத்தான் போகின்றோம். யதார்த்தத்தை மக்களிடம் பேசி உண்மை நிலவரத்தை சொல்லுங்கள். மக்களை மடயர்களாக ஆக்காதீர்கள்,
Rate this:
Cancel
Revosat - Canberra,ஆஸ்திரேலியா
23-ஜூன்-202017:03:47 IST Report Abuse
Revosat ஊருக்கு தான் உபதேசம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X