'13 மாவட்டங்களில் கொரோனா விஸ்வரூபம் எடுக்கும்'

Updated : ஜூன் 23, 2020 | Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (13) | |
Advertisement
மதுரை : ''சென்னைக்கு அடுத்தபடியாக, 13 மாவட்டங்கள், புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு விஸ்வரூபம் எடுக்கலாம்,'' என, பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர், டாக்டர் குழந்தைசாமி எச்சரித்துள்ளார்.சமீபத்தில் ஓய்வு பெற்ற இவர், நம் நிருபருக்கு அளித்த பேட்டி:பன்றிக்காய்ச்சல் எங்கெல்லாம் பரவியதோ, அங்கெல்லாம் கொரோனாவும் தாக்கும். அந்த அடிப்படையில், சென்னைக்கு அடுத்தபடியாக,
TN Corona Updates,TN Health,TN Fights Corona, Corona, TN Against Corona,TN Govt, coronavirus, Tamil Nadu, Covid19

மதுரை : ''சென்னைக்கு அடுத்தபடியாக, 13 மாவட்டங்கள், புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு விஸ்வரூபம் எடுக்கலாம்,'' என, பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர், டாக்டர் குழந்தைசாமி எச்சரித்துள்ளார்.

சமீபத்தில் ஓய்வு பெற்ற இவர், நம் நிருபருக்கு அளித்த பேட்டி:பன்றிக்காய்ச்சல் எங்கெல்லாம் பரவியதோ, அங்கெல்லாம் கொரோனாவும் தாக்கும். அந்த அடிப்படையில், சென்னைக்கு அடுத்தபடியாக, மதுரை, திண்டுக்கல், வேலுார், கோவை, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, துாத்துக்குடி,கன்னியாகுமரி ஆகிய, 13 மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரியில், விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புள்ளது.


latest tamil newsஇதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. முதற்காரணம், மக்கள் தொகை அடர்த்தி. இந்நகரங்களில், மக்கள் நெரிசலாக வசிப்பதால், தீவிர பரவல் நிலை உண்டாகும்.அடுத்து, அதிக மக்கள் பயணிப்பது. மாவட்டத்தின் புறநகர், பக்கத்து மாவட்டங்களில் இருந்தும், இங்கு தினமும் அதிக மக்கள் வந்து செல்கின்றனர். மூன்றாவதாக, அதிக மருத்துவமனைகள் இருப்பது. அதிகப்படியான மக்கள் சிகிச்சைக்கு வரும்போது, வைரஸ் பரவல் தீவிரமடையும். எனவே, இந்த மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்பும், மக்கள் ஒத்துழைப்பும் அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.A.Raj - Chennai,இந்தியா
23-ஜூன்-202020:25:10 IST Report Abuse
S.A.Raj அதிக மருத்துவமனைகள் இருப்பதன் மூலம் நோய் பரவும் என்னும் கருத்து புதுமையாக உள்ளது. அதிகப்படியான மக்கள் சிகிச்சைக்காக வருவதன் மூலமும் நோய் பரவுகிறது என்பதால் மக்கள் அதிகமாக சிகிச்சைக்கு வரக்கூடாததா என்னும் கேள்வி எழுகிறது.
Rate this:
Cancel
Selvaraj Thiroomal - Chennai,இந்தியா
23-ஜூன்-202015:25:15 IST Report Abuse
Selvaraj Thiroomal அலோபதி மருத்துவம் நோய் தொற்றை குறைக்க முடியவில்லையென்றால் எதை வைத்து ஊரடங்கு தொற்றை முடக்குமென்று தெரியவில்லை. சித்தமருத்துவம் நல்லதீர்வாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மத்திய ஆயுஷ் அமைச்சகமும் பச்சைக்கொடி காட்டிவிட்டது. மக்களின், வசதிவாய்ப்பிற்கு தகுந்தபடி அலோபதியோ, ஓமியோபதியோ, சித்தமருத்துவமோ இல்லை வீட்டிலே முடங்கிக்கிடப்பதோ விருப்பத்திற்கு ஏற்றாற்போல் முடிவெடுத்து கொள்ளட்டுமே. அரசால் மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற முடியாதபோது கட்டாயமுடக்கம் மூலம் மக்களின் வாழக்கையை முடக்கி தெருவில் நிற்கவைப்பது நியாயமா?
Rate this:
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
23-ஜூன்-202014:37:57 IST Report Abuse
Gnanam விமானநிலையங்கள், ரயில்நிலையங்கள், மற்றும் மருத்துவமனைகள் மூலமாகத்தான் இந்த கொரோனா வைரஸ் அதிகமாக தொற்றிக்கொள்கிறது. மக்கள் சற்று கவனமாக அரசின் அறிவுரைகளின்படி தங்களை பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X