மாலத்தீவில் இருந்து 198 பேர் தூத்துக்குடி வருகை| INS Airavat returning from the Maldives with 198 Indians | Dinamalar

மாலத்தீவில் இருந்து 198 பேர் தூத்துக்குடி வருகை

Updated : ஜூன் 23, 2020 | Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (1) | |
திருநெல்வேலி: ஊரடங்கால் மாலத்தீவில் சிக்கி தவித்த 198 இந்தியர்கள், மத்திய அரசின் முயற்சியால், மாலத்தீவில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடி வந்தனர்.வெளிநாடுகளில் கொரோனா காலத்தில் தவிப்பவர்களை மீட்பதற்காக மத்திய அரசு சமுத்திர சேது என்ற அறிவிப்பின் மூலம் கடற்படை கப்பல்களை அனுப்பி மீட்டு வருகிறது. அதன்படி மாலத்தீவில் இருந்து 198 இந்தியர்களை அழைத்து கொண்டு
INS Airavat, Maldives, stranded indians, Tuticorin, coronavirus lockdown, coronavirus, மாலத்தீவு, தூத்துக்குடி, தமிழகம், புதுச்சேரி, மத்திய அரசு,

திருநெல்வேலி: ஊரடங்கால் மாலத்தீவில் சிக்கி தவித்த 198 இந்தியர்கள், மத்திய அரசின் முயற்சியால், மாலத்தீவில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடி வந்தனர்.


latest tamil newsவெளிநாடுகளில் கொரோனா காலத்தில் தவிப்பவர்களை மீட்பதற்காக மத்திய அரசு சமுத்திர சேது என்ற அறிவிப்பின் மூலம் கடற்படை கப்பல்களை அனுப்பி மீட்டு வருகிறது. அதன்படி மாலத்தீவில் இருந்து 198 இந்தியர்களை அழைத்து கொண்டு ஐ.என்.எஸ் ஐராவத் கடற்படை கப்பல் இன்று காலை தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தது. தமிழகத்தை சேர்ந்த 195 பேர் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 3 பேர் உட்பட 198 பேர் வந்து உள்ளனர்.


இவர்கள் அனைவருக்கும் தெர்மோ ஸ்கேனர் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதனை தொடர்ந்து குடியுரிமை சோதனைக்கு பின்னர் தங்களது சொந்த ஊர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.


latest tamil newsபுதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X