சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறையில் தந்தை, மகன் மர்ம மரணம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Updated : ஜூன் 23, 2020 | Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (48)
Share
Advertisement
கோவில்பட்டி, சிறை, மரணம், போலீசார், ஸ்டாலின், Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, dmk, MK Stalin, death, father, son, Thoothukudi, jail

திருநெல்வேலி: கோவில்பட்டி சிறையில், விசாரணை கைதிகள் காயமுற்ற நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் உயிரிழந்தனர். இதனால், அவர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து இரண்டு எஸ்.ஐ.,க்கள் மற்றும் இரண்டு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து சிறைத்துறை ஏடிஜிபிக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மொபைல் கடை வைத்திருப்பவர் பென்னிங்ஸ் 31. கடந்த 20ல் ஊரடங்கின் போது கடையை திறந்ததாக கூறி போலீசார் பென்னிங்ஸ், அவரது தந்தை ஜெயராஜ் 60, ஆகியோரை கைது செய்து கோவில்பட்டி சிறையில் அடைத்தனர். அங்கு காயமுற்ற நிலையில் இருவரும் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரே இரவில் அடுத்தடுத்து இருந்தனர்.


latest tamil newsஅவர்களது மரணத்தில் மர்மம் தொடர்வதால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சாத்தான்குளத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், இந்த மரணத்தை கண்டித்தும், போலீசார் மீது நடவடிக்கை கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இரண்டு எஸ்.ஐ.,க்கள், மற்றும் இரண்டு போலீசார் சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறுகையில், விசாரணை கைதிகள் மரணத்திற்கு போலீசார் காரணம் என்ற குற்றச்சாட்டினை விசாரிக்க நீதிபதி தலைமையில் விசாரணை துவங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இரண்டு எஸ்.ஐ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 2 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் இடமாற்றம் செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


போலீசுக்கு நோட்டீஸ்


இந்த சம்பவம் தொடர்பாக 4 வாரத்தில் பதிலளிக்க சிறைத்துறை ஏடிஜிபிக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


ஸ்டாலின் கண்டனம்


latest tamil news


இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: சாத்தான்குளத்தில் மொபைல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரையும் கடந்த 19ம் தேதி போலீசார் அழைத்து சென்றனர். 22ம் தேதி நெஞ்சுவலியால், பென்னிக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்திருக்கிறார். பிறகு ஜெயராஜூம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட அவரும் இறந்துவிட்டார். போலீசாரால், கடுமையாக தாக்கப்பட்டதால் தான் மரணம் அடைந்திருக்கிறார்கள் என அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கொரோனா பேரழிவை உருவாக்கி வரும் நெருக்கடியில் வாய்த்தகராறு காரணமாக தந்தை மகன் என இரண்டு உயிர்களை பறிக்கும் அளவுக்கு போலீசார் நடந்து கொள்கிறது என்றால், இது திரைமறைவு போலீஸ் ஆட்சியா? உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் இதற்கு உரிய பதிலளிக்க வேண்டும். மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையாக தண்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட உயிர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி., கனிமொழி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இருவரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் உயிரிழந்துள்ளனர். போலீசார் தாக்கியதில் உயிரிழப்பு நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சம்பவத்தை முறையாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் வலியுறுத்த உள்ளேன். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Unmai Vilambi - Neelgiri,இந்தியா
24-ஜூன்-202005:48:58 IST Report Abuse
Unmai Vilambi சில போலீஸ் மிக அதிகமாக நினைத்து மக்களை அடிக்கிறார்கள். இவர்கள் அடித்தால் ஏன் என்று கேட்க முடியாது. இப்போது அடித்தே (சித்திரவதை செய்து) கொன்று விட்டார்கள். இந்த போலீசை மிக்க சன்மானம் கொடுத்து வாழ்த்த வேண்டும். அவர்களின் குடும்பத்திற்கும் தகுந்த சன்மானம் வழங்கவும். அந்த சன்மானத்தைப் பார்த்து வேற போலீஸ்க்கும் ஆர்வம் வர வேண்டும் - தேவை இல்லாமல் அடிக்கக் கூடாதென்று.
Rate this:
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
24-ஜூன்-202005:27:09 IST Report Abuse
B.s. Pillai The death of young person can not be any reason other than the brutality of the Police. Is it a crime to keep the shop punishable by death? The Collector should file murder case against the Police concerned This is more cruel than the murder of George Floyd in USA. The Human Rights organisation should not rest till these culprits are brought to its logical end and put behind bars.
Rate this:
CHINTHATHIRAI - TUTICORIN,இந்தியா
24-ஜூன்-202017:12:31 IST Report Abuse
CHINTHATHIRAINo use in believing our police. it seems to be. What ever the case they won't have rights to kill him...
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
24-ஜூன்-202005:21:38 IST Report Abuse
Matt P கரோனா விட்டிருக்கும் அறிக்கையை ஏற்று கொள்ளலாம். ஸ்டாலின் அரசை குறை கூற வேண்டும் என்று கூறுகிறார். காவக்காரனுக செய்த தப்புக்கு காவக்காரனுகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். இங்க கூட கழுத்து நெரித்து ஒருவரை கொண்டதற்காக காவக்காரனுக்கு தண்டனை கிடைத்து விட்டது. யாரும் அதற்க்கு அரசு காரணம் என்று கருதவில்லை. நம்ம நாட்டில எல்லா அட்டூழியங்களும் உங்க தந்தை காலத்தில் இருந்தே நடக்கிறது என்பதும் உண்மை தான் .
Rate this:
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
24-ஜூன்-202007:19:44 IST Report Abuse
Matt Pகனிமொழி விட்டிருக்கும் அறிக்கையை ஏற்று கொள்ளலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X