எச்-1 பி விசா; தகுதி அடிப்படையில் வழங்க டிரம்ப் உத்தரவு

Updated : ஜூன் 23, 2020 | Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (6) | |
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவில் எச்-1 பி விசாவை தகுதி அடிப்படையில் வழங்க அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல், தங்கி இருந்து வேலை செய்வதற்காக பிற நாட்டினை சேர்ந்தவர்களுக்கு எச்-1 பி விசா வழங்கப்படுகிறது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்களே இந்த எச்-1 பி விசாக்களை அதிகம் பெற்று வருகின்றனர். இந்த விசா
H1B Visa, US, Trump, donald trump, எச்-1 பி, விசா, தகுதி அடிப்படை, டிரம்ப், உத்தரவு, அமெரிக்கா

வாஷிங்டன்: அமெரிக்காவில் எச்-1 பி விசாவை தகுதி அடிப்படையில் வழங்க அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல், தங்கி இருந்து வேலை செய்வதற்காக பிற நாட்டினை சேர்ந்தவர்களுக்கு எச்-1 பி விசா வழங்கப்படுகிறது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்களே இந்த எச்-1 பி விசாக்களை அதிகம் பெற்று வருகின்றனர். இந்த விசா வைத்துள்ள ஒருவர் 60 நாட்கள் மட்டுமே சம்பளம் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்க முடியும், அதன் பின்பு தாய்நாட்டு திரும்ப வேண்டும் என்பது அங்கு சட்டமாக உள்ளது. அமெரிக்காவில் ஊரடங்கு இன்னும் முடியாத நிலையில், வேறு வேலையைத் தேட வழியில்லை என்பதுடன் 60 நாட்களுக்குப் பின் கால நீட்டிப்பிற்காக அனுமதியும் கோர முடியாது.


latest tamil newsஇந்த நிலையில், கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட ஊரடங்கை கருத்தில் கொண்டு எச்1பி, எச்4 விசாவை நிறுத்தி வைத்துள்ள அதிபர் டிரம்ப், அந்தத் தடையை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்க உள்ளதாக தகவல் வெளியானது. மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஜே 1 விசாக்களும் இனி கொரோனாவை குணப்படுத்த முன்வரும் மருத்துவர்களுக்கு தான் வழங்கப்படும் என்றும் அமெரிக்கா புதிய கெடுபிடிகளை அறிவித்துள்ளது.
இதற்கிடையே எச் -1 பி விசா முறையை "சீர்திருத்த" மற்றும் தகுதி அடிப்படையில் வழங்குமாறு டிரம்ப், தனது நிர்வாகத்திற்கு உத்தரவிட்டதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வெள்ளை மாளிகை கூறியுள்ளதாவது:


latest tamil news


எச் -1 பி விசா முறை, தகுதி அடிப்படையிலான குடியேற்ற முறைக்கு நகர்கிறது. டிரம்ப் நிர்வாகம் மிக உயர்ந்த திறமையான தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் அமெரிக்க வேலைகளைப் பாதுகாப்பதற்கும் குடியேற்ற முறையை சீர்திருத்துகிறது. இந்த சீர்திருத்தங்களால் எச்-1 பி திட்டம் அதிக ஊதியம் வழங்கப்படும் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும், மேலும் அதிக திறமையான விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவதை உறுதி செய்யும். மேலும், இது அமெரிக்கத் தொழிலாளர்களின் ஊதியத்தைப் பாதுகாக்கவும், அமெரிக்காவுக்குள் நுழையும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அதிக திறமை வாய்ந்தவர்களாகவும், அமெரிக்காவின் தொழிலாளர் சந்தையை குறைக்காது என்பதையும் உறுதிப்படுத்த உதவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
23-ஜூன்-202015:01:30 IST Report Abuse
வெகுளி திறமையானவர்களை மட்டுமே வரவேற்பார்கள்..... சமசீர் ஜல்லிகளுக்கு சங்குதான்....
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
23-ஜூன்-202014:48:05 IST Report Abuse
Vijay D Ratnam என்ன பெரிய தகுதி அடிப்படையில் கொடுப்பீங்கன்னு தெரியும் தல. ஏற்கெனவே அகதிகளை உள்ள விடமாட்டிங்க, இனி மெக்சிகோக்காரர்களுக்கு நோ,கறுப்பர்களுக்கு நோ, இஸ்லாமியர்களுக்கு நோ, சீனர்களுக்கு நோ, அதானே. ஆஸ்திரேலியர்களுக்கு, இந்தியர்களுக்கு பிரச்சினை இருக்காது அவ்ளோதான். கோட்டா உண்டா பாஸ்.
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
23-ஜூன்-202016:40:03 IST Report Abuse
s.rajagopalanதகுதி அடிப்படையிலா ? நல்ல விஷயம்தானே " அந்த நல்ல நாளும் இங்கு வந்திடாதோ .. என்று பாட தூண்டுகிற செய்தி ? trump businessman ஐயா .. வாக்கு வங்கி அரசியல்வாதி அல்ல...
Rate this:
Cancel
23-ஜூன்-202013:18:24 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் வெளிநாடுகளைச் சேர்ந்த மக்களால்தான் அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ந்துள்ளது, அவர்களுக்கு எனது ஆதரவு தொடரும் என்று சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்குள் வேலைக்காக வரும் வெளிநாட்டினரைத் தடுக்கும் வகையில் ஹெச்-1பி விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்களை நிறுத்தி வைத்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவு எனக்கு அதிருப்தி அளிக்கிறது. வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு எனது ஆதரவு தொடரும். அனைவருக்கும் வாய்ப்புகள் பரந்து கிடைக்க வேண்டும்”
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X