சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி இ-பாஸ் மூலம் கோவை வந்த 30 பேர்; ஆம்னி பஸ் பறிமுதல்

Updated : ஜூன் 23, 2020 | Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
கோவை, போலி இ-பாஸ், அதிகாரிகள், ஆம்னிபஸ், பறிமுதல், சோதனை, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, tamil nadu, coimbatore, fake e-passes, vehicle seized

கோவை: போலி இ பாஸ் மூலம் பல மாநிலங்களில் கடந்த ராஜஸ்தானில் இருந்து கோவை வந்த 30 பேர், அதிகாரிகளிடம் சிக்கினர். அவர்கள் வந்த ஆம்னி பஸ் பறிமுதல் செய்யப்பட்டது.

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பலவித தளர்வுகளுடன் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கோவை மாவட்டத்தில் கருமத்தம்பட்டியில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சோதனை சாவடி அமைத்து வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை கண்காணித்து வந்தனர். இந்நிலையில், இன்று காலை ராஜஸ்தானில் இருந்து ஆம்னி பஸ் ஒன்றை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்த 30 பேரிடம் இருந்த இ-பாஸை வாங்கி சோதனை செய்தனர். அதில், அனைத்தும் போலி என தெரிந்தது.


latest tamil newsஇதனையடுத்து, அவர்களை கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்த அதிகாரிகள் பஸ்சை பறிமுதல் செய்தனர்.மேலும் போலி இ-பாஸ் மூலம் பல மாநிலங்களை கடந்து எப்படி அவர்கள் தமிழகத்திற்குள் நுழைந்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian - Bangalore,இந்தியா
23-ஜூன்-202014:58:49 IST Report Abuse
Balasubramanian எதாவது மாநில எம்எல்ஏ வாக இருக்க போகிறார்கள் 😄 தீவிர விசாரணை நடத்துங்கள், எந்த அரசு கவிழப் போகிறது என்று? 😂
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
23-ஜூன்-202012:53:57 IST Report Abuse
தல புராணம் ராஜஸ்தான் - மத்திய பிரதேஷ் - மகாராஷ்டிரா - தெலுங்கானா - ஆந்திரா - அப்புறம் தமிழ்நாடு, இப்படி அஞ்சு மாநிலங்களை கடந்து, தமிழகத்தில் உள்ளே நொழைஞ்சு 450 கிமீ உள்ளே வந்தா தான் கோயம்புத்தூர்.. இங்கே வந்து வெக்குறானுங்க இ-பாஸ், கொசு பாஸ்ன்னு.. வழியெங்கும் லஞ்சம் தான் பாஸ். லஞ்ச ஊழலில் முதலிடம் வகிக்கும் இந்த கேடுகெட்ட அரசாங்கம் தான் லடாக்கில் சீனாக்காரனை நிப்பாட்டப் போறானுங்க. ஹா.. ஹா.. ஹா..
Rate this:
23-ஜூன்-202013:23:04 IST Report Abuse
வந்தே மாதரம் தலபுராணம் நீங்கள் சொல்லிய ஐந்து மாநிலங்களிலும் பாஜக ஆட்சி செய்யவில்லை. இந்த ஐந்து மாநிலமா போராடுகிறது சீனாவை எதிர்த்து? இதைத்தான் நம்மூரில் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுதல் என்ற பழமொழி இருக்கிறது...
Rate this:
kumzi - trichy,இந்தியா
23-ஜூன்-202014:18:35 IST Report Abuse
kumziதேசத்துரோகி மூர்க்கன்...
Rate this:
Paramasivam - Chennai,இந்தியா
23-ஜூன்-202016:40:39 IST Report Abuse
Paramasivamதிருந்தாத தேசத்துரோகி மூர்க்கன்,...
Rate this:
Ray - Chennai,இந்தியா
23-ஜூன்-202017:31:11 IST Report Abuse
Raymaharashtra karnataka are only involved enroute not Telengana and AP...
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
23-ஜூன்-202012:28:49 IST Report Abuse
A.George Alphonse திருந்தாத ஜென்மங்கள்.இவர்கள் நரகத்தில் இருக்கும் தலைமை பிசாசு லூசிபேருக்கே அல்வாகொடுத்து அங்கிருந்து தப்பிவிடுவார்கள்.
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
23-ஜூன்-202012:45:47 IST Report Abuse
தல புராணம்இவர்கள் இந்துக்கள். சித்திரகுப்தனிடம் தான் கணக்கு உள்ளது. நீங்கள் அனாவசியமாக மூக்கை நுழைத்து லூசிபரை பஞ்சாயத்துக்கு கூப்பிடவேண்டாம்....
Rate this:
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
23-ஜூன்-202013:55:13 IST Report Abuse
மலரின் மகள்பாவப்பட்ட ஏழை எளியவர்களுக்கு பரிந்து பேசுவதற்கு கருணை உள்ளங்கள் வேண்டும்.சுட்டெரிக்கும் வெயில் ஆயிரக்கணக்கான மைல்களை தாண்டி வேலைக்கு வந்து எப்படியோ சமாளிக்க வேண்டிய நிர்பந்தம். கோவில் இருக்கும் ராஜஸ்தானிய வியாபாரிகள் அவர்களுக்கு வேலை தருவார்கள் வாழ்க்கையை சமாளிக்கலாம் என்று வந்திருக்கிறார்கள். கோவையிலிருந்து தனியாக ஆம்னி பேருந்து வடமாநிலகங்களுக்கு செல்வதற்கு குறைந்தது எட்டாயிரம் ருபாய் ஆகிறது. ராஜஸ்தானிலிருந்து வந்திருக்கும் இவர்கள் பத்தாயிரம் ருபாய் கொடுத்து வந்திருக்கலாம். அரசு வாழ்வதற்குண்டான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். சிறு குறு தொழிற் நிறுவனங்களை திறக்க சொல்கிறது, தொழிலாளர் கஷ்டங்களால் அத்தகைய சாலைகள் நிரந்தரமாக மூடப்பட்டு விடவேண்டிய நிலை. சீனாவை முழுதும் நம்பி இருப்பதை விட வேறு வழியில்லை என்று மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். சுதேசி என்பதை நசுக்குகிறார்கள். ஒரே ஒரு சமீபத்திய அதாவது இன்றைய சம்பவம். மறை மலை நகரில் பல நிறுவனங்கள் உண்டு. அங்கு அவை இன்றும் செயல்படுகின்றன. பெரும்பாலான தொழிலார்கள் உள்ளோரின் தான் குடியிருக்கிறார்கள். வீட்டிற்கும் தொழிற்சாலைக்கும் இரண்டு மூன்று கி. மீ. இவர்கள் யாரும் டூ வீலர் வாகனங்களில் அலுவலகங்ளுக்கு பயணிக்க கூடாதாம். நடந்தே தான் செல்லவேண்டுமாம். ஏன் எதற்கு நடந்து சென்றால் கொரநா வரத்து என்றும் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றால் வரும் என்று எந்த புத்திசாலி சொல்லி கொடுத்ததார்களோ. அரைமணிநேரம் நடந்து செய்வதற்கும், ஐந்தே நிமிடத்தில் வாகனத்தில் செல்வத்திலும் இதில் பரவல் அதிகம் இருக்கும்? உள்ளூர் காவலர்கள் கொஞ்சம் இலகுவாக விட்டுவிடுவார்கள் எனதற்காக காவலர்கள் அனைவரும் தென் மாவட்டங்களில் இருந்து கண்காணிப்புக்கு பணியமர்த்த இருக்கிறது அரசு. விசாரித்து பாருங்கள். சென்னையிலிருந்து இரண்டு சக்கர வாகனங்களில் தென்மாவட்டங்களுக்கு செல்லலாம், அந்த சாலை விபத்துக்கான ரிஸ்க் தாராளமாக எடுக்கலாம் அனால் பேருந்தில் செல்ல கூடாது என்று இவர்கள் கொரானாவை தடுக்கிறார்கள். ஐயா உங்களின் பேணா ஏழை எளியவர்களுக்காகவும், அரசின் செய்கைகளால் மக்கள் படும் வேதனைக்கு எதிராகவும் சுட்டி காட்டும் விதத்தில் இருந்த பொது உங்கள் ஆங்கிலம் அருமையாக இருந்தது. இப்போது தமிழில் எழுதும் பொது எனோ ஜதி மாறிவிட்டீர்கள். இன்றைய அரசின் ஒரே பிரைச்சினை எப்படியாவது தாங்கள் எடுத்த தவறான முடிவை சரிதான் என்று மக்களை நம்ப வைப்பது தான். அதற்காகவே அரசின் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது என்று அச்சம் மேலோங்குகிறது. இயற்கையாக உருவாகினால் அது உலகம் முழுவதுமே அதே சூழ்நிலைகள் கிடைப்பெற்றபோது உருவாகி இருக்கும். உருவாக்கி பரப்புவதாக இருந்திருந்தால் அதை நாம் சொல்வது போல விமான பயணிகளை தெவிற்பதால் செய்திருக்க முடியவே முடியாது. பிரிட்டனில் இந்த வருட துவக்கத்தில் முக்கிய சுற்றுலா பகுதிகளில் சீன பயணிகள் பலர் வந்து சென்றார்கள் வழக்கம் போலவே. இந்த முறை வழக்கத்திற்கு மாறாக ஒரு குறிப்பிட்ட கடையில் மட்டுமே விற்கப்படுகின்ற ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை மட்டும் அனைவரும் வாங்கி சென்றார்கள். அதை வாங்க வேண்டும் என்று கட்டாயம் சொல்லப்பட்டதா என்றும் அதை எடுத்து கொண்டு தான் பிரித்து படித்து விட்டு அல்லது பயன் படுத்தி கொண்டு தான் விமானத்தில் செல்லவேண்டும் நாடு திரும்ப வேண்டும் என்று கூட சொல்லப்பட்டிருக்கவேண்டும் என்று சந்தேகிக்கிறார்கள். அதில் எதோ சூட்சுமம் இருக்கவேண்டும் என்றும் அது ஒரு மிக சாதாரண புத்தகம் தான் ஒன்லைனில் படித்து கொள்ள கூடியது தான். இருந்தும் அதனுடன் இணைந்த இலவசத்தோடு பெற்று சென்றிருக்கிறார்கள். எதற்காக என்று குழப்பம் இருக்கிறது என்று பல செய்திகள் உண்டு. உருவாக்கி பரப்பவேண்டும் என்று நினைத்திருந்தால் அதை யாராலும் தடுத்திருக்க முடியாது. தானாக உருவாகியது என்றால் அது உருவான சூழல் இருக்கும் அனைத்து தேசங்களிலும் உருவாகி இருக்கும். அனைத்திற்கும் மேலைநாடுகளையே நம்பி இருக்கும் நமது ஆராய்ச்சிகளின் தோல்விகள் முயற்சி இன்மை தெளிவாக தெரிகிறது இப்போது. பணமிருந்தால் பாஸ் தாராளமாக கிடைக்கும். இல்லாதவர்களுக்கு? அன்போடு அணுகுவோம் ஏழைஎளியவர்களை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X