பொது செய்தி

இந்தியா

ஏர் இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு

Updated : ஜூன் 23, 2020 | Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி : அமெரிக்காவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக இயக்கப்படும் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்களுக்கு அமெரிக்க அரசு அனுமதி மறுத்துள்ளது.இது தொடர்பாக அமெரிக்க போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா காலத்தில், அமெரிக்காவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கு, ஏர் இந்தியா நிறுவனம் விமானங்களை இயக்குகிறது. அதற்காக
ஏர்இந்தியா, அமெரிக்கா, இந்தியா, விமானம், தடை, US, restriction, ban, special flights, India, us govt, aircraft, indian flight

புதுடில்லி : அமெரிக்காவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக இயக்கப்படும் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்களுக்கு அமெரிக்க அரசு அனுமதி மறுத்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா காலத்தில், அமெரிக்காவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கு, ஏர் இந்தியா நிறுவனம் விமானங்களை இயக்குகிறது. அதற்காக கட்டணங்களை வசூலிக்கிறது. ஆனால், இந்தியாவில் உள்ள போக்குவரத்து விதிமுறைகள் காரணமாக அமெரிக்க விமானங்களுக்கு அனுமதி அனுமதி கிடைப்பது இல்லை. இது சரியான நடைமுறைகள் இல்லை. வேறுபாடு காட்டப்படுகிறது. இதனால், அமெரிக்க நிறுவனங்களுக்கு பின்னடைவு ஏற்படுகிறது.


latest tamil newsஇதனால், ஏர் இந்திய விமானங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு 30 நாள் அமலில் இருக்கும். விமானங்களை இயக்கப்படுவதற்கு முன்னர், ஏர் இந்தியா அனுமதி பெற வேண்டும். இந்தியாவில் அமெரிக்க விமானங்களுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு. தடை நீக்கப்படும் எனக்கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.ANBARASAN - muscat,ஓமன்
23-ஜூன்-202018:19:05 IST Report Abuse
K.ANBARASAN இந்த விஷயத்தில் இந்தியாவின் செயல்பாடு சரியானதல்ல. அமெரிக்க விமானங்களுக்கும் இங்கு இறங்க அனுமதி வழங்கப்பட வேண்டும்.
Rate this:
Cancel
G.Loganathan - Coimbatore,இந்தியா
23-ஜூன்-202017:13:46 IST Report Abuse
G.Loganathan நாம் கேட்கும் போதெல்லாம் மற்ற நாடுகள் அனுமதித்தால் நடத்தலாம் என ஏர் இந்தியாவின் கொள்ளையடிக்கும் விமான போக்குவரத்துக்குக்கு வக்காலத்து வாங்கினார் திரு.பூரி. இப்போது உண்மை வெளியாகி மந்திரியும், கொள்ளை கும்பலும் கரியை பூசிக்கொண்டனர். இதே போலத்தான் டீசல், பெட்ரோல் விலையும். கச்சா எண்ணெய் விலை அதள பாதாளத்திற்கு சென்றது இந்தியாவில் விலை குறையவில்லை, இன்றைய நிலையில் இப்படி விலை ஏற்றினால் அத்தியாவசிய பொருள்களின் விலை என்னவாகும். தொழிலாளர்களிடம் பணம் இல்லை. இதை எவரும் கண்டு கொள்ளவில்லையே. ஏன் இந்த அவலம்.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
23-ஜூன்-202016:49:32 IST Report Abuse
மலரின் மகள் இந்தியாவின் வந்தே பரத் மிஷன் சரியானது இல்லை. மிக பெரிய சந்தேகத்தை உண்டுபண்ணியது இது. முதலில் வெளிநாடுகளில் இருந்து தூதரக மற்றும் அரசு அலுவல் சம்பந்தமானவர்களை திரும்ப அழைத்து கொள்வதற்காக இயக்கப்பட்டது. குறைந்த செலவில். பின்னர் இண்டிகோ ஸ்பீஸ்ஜ்ட் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் பொது இரண்டு முதல் மூன்று மடங்கு கட்டணம், வசூலிக்கப்படுகிறது. சார்ட்டர் விமானங்கள் மூலம் ஏதேனும் அமைப்புக்கள் குழுவாக இணைந்து விமானங்களை வாடகைக்கு அமர்த்தி இயக்கி கொள்ளலாம். அக்பர் ற்றவேல்ஸ், UNA, KMCC மூலம் கேரளாவின் பயனாதனித்து வருகின்றனர். உண்மையான பணமின்றி சிரமப்படுவோர் கையேந்தி காலம் கழிக்கும் நிலை தான். வெளிநாட்டு விமானங்களை இயக்குவதற்கு கடைசி நிமிடங்கள் வரை அனுமதி தருவதை பற்றி எந்த அறிவிப்பும் இன்றி கடைசியிலே தாங்கவே அனுமதி மறுத்ததாக மாறிவிடுகிறது. இப்படி இவர்கள் செய்வது கொஞ்சம் நஞ்சம் பிரச்சினைகள் அல்ல. லஞ்சம் கொடுக்கவே கூடாது என்று இருப்பதால் எங்களால் தாயகம் வந்து செல்ல இயலவில்லை. லஞ்சம் கொடுப்பதாக இருந்தால் அல்லது தனியார் நிறுவங்கினாள் மூலம் முயற்சி செய்வதாயிருந்தால் இரண்டு முறை கூட வந்து திரும்பி இருக்கலாம். கொறன என்பது பலருக்கு வேதேனை என்றாலும் சிலரின் காட்டில் மழை. அனைத்து விதமான பரிசோதனைகளும் செய்து அரசு கூறும் தனிமை படுத்தலுக்கும் சம்மத்தித்து இருப்பவர்களை கூட இவர்கத்தான் தடை விதிக்கிறார்கள். நமது பிரதமர் மீது எரிச்சல் எரிச்சலாகவே வருகிறது. சுஷ்மா ஸ்வராஜ் இல்லாதது பெரும் குறை. நமது வெளிநாட்டு மந்திரியின் செயல் பாடுகள் சுத்த மோசம். சரில்லை எனலாம். வேண்டுமானால் நீங்கள் ஒவ்வொரு தேசத்திலிருக்கும் நமது தூதரகங்களுக்கு உதவி கேட்டு ஈமெயில் அனுப்பி பாருங்கள் அது நமது மந்திரியை சந்தித்து விண்ணப்பம் கொடுத்தது போல எந்த ஒரு தகவலும் இன்றி நேரடியாக ட்ராஷ் போல்டருக்கு தான் செல்லும். எத்துணை மெயில் அனுப்பினாழும் பதில் இருக்காது. ஒரு சிலருக்கு விமானம் இயக்கும்போது உங்களுக்கு தகுதி இருந்தால் நாங்கள் தொடர்பு கொள்வோம் என்று பதில் வரும். கொன்றன என்பதை வைத்து மனா சித்திரவதை மற்றும் பொருளாதார உடல் உபாதைகளுக்கெல்லாம் தீங்கிழைத்தது நமது பாரத பிரதமரை தாராளமாக சேரும். அடுத்த முறை இவர்களுக்கு எங்களது வாக்குகள் இல்லை என்பது அனைத்து நண்பர்கள் உறவுகள் எடுத்து கொண்ட முடிவு. இந்த ஆட்சி இத்துடன் போதும் என்பது தான் எண்களின் தற்போதைய சிந்தனை. கொஞ்சம் நஞ்சம் நஷ்டமா கொடுவந்து செத்தார்கள். ஏற்கனவே பணமதிப்பிழம்பின் பொது வெளி நாடுகளில் இருந்து விட்டபடியால் அறுபதாயிரம் ருபாய் நஷ்டம். அந்த பணம் முழுவதும் வெறும் பேப்பர்களாக பழைய நாணய சேகரிப்போடு சென்று விட்டது. இப்போதோ தேவையற்ற பிரச்சினைகள். அனைத்திற்கும் நமது பிரதமர் திரு மோடி அவராலே காரணம் எங்களை பொறுத்தவரையில். இது மலருக்கு உகங்காததாக இல்லாமல் இருந்தாலும் உண்மையான எண்ணங்கள். வராதே தாயகத்திற்கு என்று சொல்வதற்கு ஒரு மோடி அடுத்து ஒரு எடப்பாடி. இவைகள் ஆட்சி போகும். போகவேண்டும். இன்றைய கால கட்டம் இவர்கள் காட்டில்மழை என்றால் நிச்சயமாக காலம் மாறும். இப்போது நாங்கள் இடுக்கண் வாருங்கள் நகுக என்று தான் இவர்களின் இன்றைய செயல்களை பார்க்கிறோம். இந்த இரு ஆட்சிகளும் போக வேண்டும். அப்போது தான் விடுவ காலம் பிறக்கும். உங்கள் ஆட்சி இனி தேவையில்லை எங்களுக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X