பொது செய்தி

இந்தியா

பயங்கரவாதிகளை அனுப்பி இந்திய வீரர்களை தாக்க பாகிஸ்தான் திட்டம்

Updated : ஜூன் 23, 2020 | Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
Pakistan, Trying, Terrorists, J&K, Police Chief, Dilbag Singh, india, pak, பாகிஸ்தான், பயங்கரவாதிகள், காஷ்மீர், தில்பாக்சிங்

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்து இந்திய வீரர்களை தாக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக யூனியன் பிரதேச போலீஸ் டி.ஜி.பி., தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் உள்ள இந்திய எல்லைப் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவல் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. இன்று (ஜூன் 23) காலை புல்வாமா மாவட்டத்தின் பன்ட்சூ பகுதியில் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சி.ஆர்.பி.எப்பின் 182-வது பட்டாலியனின் தலைமை கான்ஸ்டபிள் சுனில் காலே வீரமரணம் அடைந்தார். 2 பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்துப்பட்டனர். ஸ்ரீநகருக்கு அருகே நடைபெற்ற மற்றொரு தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகளின் ஆயுத கிடங்குகளை போலீசார் கைப்பற்றினர்.


latest tamil news


வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப்., வீரரின் உடலுக்கு ஜம்மு காஷ்மீர் டி.ஜி.பி தில்பாக் சிங் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நவ்ஷெரா, ராஜோரி - பூஞ்ச் மற்றும் குப்வாரா - கெரன் ஆகிய செக்டார்கள் வழியாக அதிகமான ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளை காஷ்மீருக்கு அனுப்ப பாகிஸ்தான் முயற்சிக்கிறது. பாதுகாப்பு படையினருக்கு எதிராக புல்வாமா போன்ற தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நாங்கள் முழு எச்சரிக்கையுடன் உள்ளோம்” என்றார். காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்புப் படையினர், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் வேந்தன் - சென்னை,இந்தியா
24-ஜூன்-202001:03:37 IST Report Abuse
தமிழ் வேந்தன் சீனாவிடம் வால் ஆட்டினால் வால் ஒட்ட நறுக்கப்படும்
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
23-ஜூன்-202021:39:19 IST Report Abuse
blocked user நேரு செய்த காமடிகளில் எல்லைக்காவல்ப்படையும் ஒன்று... கிட்டத்தட்ட இவர்கள் காவல்த்துறை போலத்தான். இவர்களை வைத்து தீவிரவாதிகளை எப்படி அடக்க முடியும்?
Rate this:
Cancel
adalarasan - chennai,இந்தியா
23-ஜூன்-202020:32:25 IST Report Abuse
adalarasan பாகிஸ்தானான் பயிற்சி கேம்பிற்குள் புகுந்து, இஸ்ரேல் ஸ்டாலில் தாக்கவேண்டும் தொடர்ச்சியாக, போர் மூண்டாலும் பரவாயில்லை?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X