பொது செய்தி

தமிழ்நாடு

'கோவைக்கு ஊரடங்கு தேவையில்லை': கலெக்டர் அறிவிப்பு

Updated : ஜூன் 23, 2020 | Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

கோவை: கோவையில் வெளி மாநில மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து வருபவர்களால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், கோவைக்கு முழு ஊரடங்கு தேவை இல்லை என, மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.latest tamil news
கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:
கோவையில் வெளி மாநில மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து வருபவர்களால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆனால், வெளியிலிருந்து கோவைக்கு வந்த, 17 ஆயிரம் பேரைக் கண்டறிந்து, அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தியுள்ளோம். தொடர்ந்து அவர்கள் சுகாதாரத் துறையினரின் கண்காணிப்பில் இருப்பர். தனிமைப் படுத்தப்பட்டவர்கள் உத்தரவை மீறி வெளியே வந்தால், கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உத்தரவை மீறி வெளியேறிய, 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளை மீறுபவர்களை கண்காணிக்க, மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.


latest tamil newsமேலும், மாநில மற்றும் மாவட்ட எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. முறையான அனுமதியின்றி கோவைக்குள் யாரும் ஊடுருவ முடியாது. கோவையில் தினமும் 2,000 பேருக்கு கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், அதில் பாதிப்பு மிகக் குறைவாகவே பதிவாகி வருகிறது. இன்று 10 பேருக்கு மட்டுமே கொரோனோ உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கோவை மாவட்டத்திற்கு முழு ஊரடங்கு தேவையில்லை.இவ்வாறு கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aaaaa - Bbbbbb,இந்தியா
25-ஜூன்-202007:43:55 IST Report Abuse
Aaaaa வீடுகளில் தனிமைபடுத்திவிட்டோம் என்பது எவ்விதபலனையும் அளிக்காது என்பதை இத்தனை ஊரடங்குகளுக்கு பிறகும் இவர்களுக்கு புரியவில்லையா?
Rate this:
Cancel
Karthik - Chennai,இந்தியா
23-ஜூன்-202020:09:30 IST Report Abuse
Karthik So far it is said that the virus spreads only through eye, nose and mouth. Why should there be a lockdown if we wear masks wherever we go, maintain social distance, wash hands frequently with soap (sanitizer for emergency). If we wear masks, it won't spread to us or spread to others (even if we / someone cough / sneeze). Even now, there are several people who don't wear masks or maintain social distance. Hence, the Government's primary duty is to make people wear masks and maintain social distance by advice or by force. Two wheelers are running at large even in small lanes during this down. Those who are following the rules are betrayed by this lockdown. LOCKDOWN is just USELESS.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
23-ஜூன்-202019:15:53 IST Report Abuse
Ramesh Sargam இருந்தாலும் கோவை மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X