எச்1-பி விசா நிறுத்தி வைப்பு; டிரம்பின் உத்தரவுக்கு சுந்தர் பிச்சை அதிருப்தி

Updated : ஜூன் 23, 2020 | Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (8) | |
Advertisement
வாஷிங்டன்: வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் எச்-1பி விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்கள் தற்காலிகமாக நிறுத்திவைத்து அதிபர் டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.கொரோனா வைரசால் அமெரிக்காவில் வேலையின்மை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, வேலைவாய்ப்பை உள்நாட்டு மக்களுக்கு வழங்கும் நோக்கில் எச்-1பி விசா உள்ளிட்ட பல்வேறு
H1B_Visa, google ceo, donald Trump, US president, trump, Sundar Pichai, Disappointed, Google, CEO, foreign work visas, IT professionals, கூகுள், சிஇஓ, எச்1பி, விசா, டிரம்ப், சுந்தர் பிச்சை, அதிருப்தி

வாஷிங்டன்: வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் எச்-1பி விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்கள் தற்காலிகமாக நிறுத்திவைத்து அதிபர் டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.கொரோனா வைரசால் அமெரிக்காவில் வேலையின்மை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, வேலைவாய்ப்பை உள்நாட்டு மக்களுக்கு வழங்கும் நோக்கில் எச்-1பி விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்கள் வழங்குவதை இந்த ஆண்டு இறுதிவரை நிறுத்திவைத்து அந்நாட்டு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இந்த நடைமுறை நாளை (ஜூன் 24) முதல் நடைமுறைக்கு வருகிறது. இதனால் அமெரிக்காவுக்கு வேலைக்காக எச்-1பி, எல்-1, ஜே விசா, எச்-2பி, எச்-4பி ஆகிய விசாக்கள் மூலம் வருபவர்கள் இந்த ஆண்டு இறுதிவரை தடை செய்யப்படுவார்கள்.latest tamil newsஇந்நிலையில், டிரம்பின் இந்த உத்தரவுக்கு கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை, கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது:


அமெரிக்கப் பொருளாதாரம் உலகளவில் மிகச்சிறப்பான நிலையை அடைந்ததற்கும், வெற்றி பெற்றதற்கும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் பங்களிப்பு அதிகம் இருக்கிறது. அமெரிக்காவுக்குள் வேலைக்காக வரும் வெளிநாட்டினரைத் தடுக்கும் வகையில் எச்-1பி விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்களை நிறுத்தி வைத்து டிரம்ப் பிறப்பித்த உத்தரவு எனக்கு அதிருப்தி அளிக்கிறது. வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்களுக்கு எனது ஆதரவு தொடரும். அனைவருக்கும் வாய்ப்புகள் பரந்து கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Chennai,இந்தியா
27-ஜூன்-202000:58:46 IST Report Abuse
Rajesh ஒண்டவந்த பிடாரி ஊர் பிடாரியை துரத்த அது என்ன இந்தியாவா? பொழைக்க போன இடத்துல அடிமைவேலை செய்து, அங்கிருக்கும் வெள்ளையர்களின் வேலைக்கு உலை வைத்து [எச்1-பி விசா] பாத்து, பனிரெண்டு மணி நேர வேலை அடிமைகளை போல செய்து... இப்பொழுது கொக்கரிக்க கூடாது ............ தமிழ்நாட்டில், வட நாட்டவர் வேலைக்கு வந்தாலே போராடும் நமக்கு, அமெரிக்காவில், அவர்கள் நாட்டின் குடிமக்களை காப்பாற்ற சட்டம் இயற்றும் அதிபரை போற்றாமல் தூற்றும் மூடர்களை என்ன என்பது..............
Rate this:
Cancel
23-ஜூன்-202021:27:27 IST Report Abuse
Balamurugan B தமிழன் என்பதை ஊர்ஜிதபடுதியிருகிரார், வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
23-ஜூன்-202019:43:57 IST Report Abuse
J.Isaac வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவிற்கு வந்து சுயசார்பு திட்டத்தில் பங்கு பெறலாம்.
Rate this:
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
26-ஜூன்-202013:06:03 IST Report Abuse
RaajaRaja Cholanpaavadai puthiya kaatureiyae...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X