கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிறையில் தந்தை, மகன் மர்ம மரணம்: பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய உத்தரவு

Updated : ஜூன் 23, 2020 | Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement
தூத்துக்குடி, கோவில்பட்டி, சிறை, தந்தை, மகன், மரணம், பிரேத பரிசோதனை, உயர்நீதிமன்ற மதுரை கிளை, madurai, madurai HC, High court, father, son, custody death,  judicial custody, autopsy, video-recording of autopsy, TN news, tamil nadu, Sattankulam , Jayaraj, Bennix, THOOTHUKUDI

மதுரை : சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் உடலை பிரேத பரிசோதனை செய்ய, பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி முதல்வருக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மரக்கடை நடத்திவருபவர் ஜெயராஜ் 63. இவரது மகன் பென்னிக்ஸ் 31. அதே பகுதியில் மொபைல் போன் கடை நடத்திவருகிறார்.
கடந்த 19ம் தேதி இரவு 9:00 மணியளவில் போலீசார் முருகன், முத்துராஜ் அங்கு ரோந்து வந்தனர். ஊரடங்குகாலத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் கடந்து மொபல் கடை திறந்து வைத்திருப்பதாக கூறி, ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை கடைகளை அடைக்க கூறினர். இதில் வாக்குவாதம் ஏற்பட்டது. எனவே போலீசார் தந்தை, மகன் இருவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்றனர். அவர்கள் மீது ஜாமினில் வெளிவரமுடியாதபடி 188, 269, 29பி, 353, 506 2 ஆகிய பிரிவுகளில் வழக்குபதிவு செய்தனர். விசாரணையின் போது மகன் கண்முன்பாகவே தந்தையை கடுமையாக தாக்கினர். இருவரும் ஆசனவாய்க்கு மேலாக லத்தியால் கடுமையாக தாக்கப்பட்டனர்.தற்போது துாத்துக்குடி மாவட்டத்தில் கைது செய்யப்படுவர்கள் கொரோனா சோதனைக்காக கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்படுகின்றனர். எனவே ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.


latest tamil newsபோலீசாரின் தாக்குதல் காரணமாக 22ம் தேதி இரவு 8:00 மணிக்கு பென்னிக்ஸ் உடல்நிலை பாதிக்கப்பட்டது. கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.மிகுந்த காயங்களுடன் இருந்த ஜெயராஜூம் இன்று அதிகாலை 5:30 மணிக்கு இறந்தார். இருவரது உடல்களும் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.இறந்தவர்களின் உடல்களில், போலீசார் தாக்கிய காயங்கள் உள்ளதா என்பது குறித்து கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் நேரில் ஆய்வு செய்தார்.


latest tamil news


Advertisement
மறியல் போராட்டம்latest tamil newsதந்தை, மகன் போலீசார் தாக்குதலில் இறந்த சம்பவத்தால் சாத்தான்குளத்தில் பொதுமக்கள், வியாபாரிகள் காமராஜ் சிலை முன்பாக திரண்டு போராட்டங்களில் ஈடுபட்டனர். திருச்செந்துார் தி.மு.க.,எம்.எல்.ஏ.,அனிதா ராதாகிருஷ்ணன், போராட்டத்தில் பங்கேற்றார். மாலை வரையிலும் போராட்டம் தொடர்ந்தது. விசாரணைக்கு அழைத்துச்சென்ற எஸ்.ஐ.,க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், போலீசார் முருகன், முத்துராஜ் ஆகியோர் கடுமையாக தாக்கியதால்தான் இறந்தனர். எனவே அவர்கள் மீது குற்றநடவடிக்கை எடுக்கவேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தில் இருவருக்கு வேலை வழங்க வேண்டும். நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கோவில்பட்டியிலும் மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சஸ்பெண்ட்latest tamil news
எஸ்.ஐ.,க்கள் இருவரையும் எஸ்,பி.,அருண் பாலகோபாலன் ஆயுதப்படைக்கு மாற்றம்செய்வதாக கூறினார். ஆனால் கலெக்டர் சந்தீப் நந்துாரி, எஸ்,ஐ.,க்களை சஸ்பெண்ட் செய்தும், சாத்தான்குளம் போலீசார் கூண்டோடு மாற்றம் செய்தும் உத்தரவிட்டார். இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க.,தலைவர் ஸ்டாலின், துாத்துக்குடி எம்.பி., கனிமொழி, ம.தி.மு.க.,பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கோரிக்கைவிடுத்தனர். இருவரும் வியாபாரிகள் என்பதால் இன்று 24ம்தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்துவதாக வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ளன.


மனித உரிமை ஆணையம்மாநில மனிதஉரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து அறிக்கை அளிக்குமாறு உள்துறை முதன்மை செயலாளருக்கும், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.,க்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.மனித உரிமை ஆணைய விசாரணை குழுவினர் சம்பவம் குறித்து நேரில் விசாரித்து அறிக்கை அளிப்பார்கள் என்றார்.


முறையீடுஜெயராஜின் மனைவி செல்வராணி உயர்நீதிமன்ற கிளையில் தொடர்ந்த வழக்கில் கூறியுள்ளதாவது: போலீசார் கடுமையாக தாக்கியதால் தான், கணவன், மகன் மரணமடைந்தனர். அவர்களது உடல் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்து அதனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.


latest tamil news
இதனை விசாரித்த நீதிமன்றம், இருவரது உடல் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும். 3 டாக்டர்கள் கொண்ட முன்னிலையில், வீடியோ பதிவு செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி முதல்வருக்கு உத்தரவிட்டனர்.

இதனிடையே, இருவர் மர்ம மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டத்திற்கு வணிகர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gandhi - Chennai,இந்தியா
29-ஜூன்-202015:01:03 IST Report Abuse
Gandhi போலீஸ் துறையின் சீர்கேடுகள் : போலீஸ் துறையில் தேர்வுகளில் ஊழல். தமிழக போலீஸ் துறையில் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் ஆதிக்கம் பெருகுவது ஏன் ? . குறைந்த பட்ச கல்வித்தகுதி நிர்ணயம் பல யுகங்களாக உயர்த்த படாமல் இருப்பது. காட்டுமிராண்டிகளுக்கு வாய்ப்பளிக்கிறது. போலீஸ் இன்னும் ஆங்கிலேயர் கால மமதையுடம் இந்திய மக்களை பார்க்கிறார்கள். போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச்செல்லப்படும் ஆண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். போலீஸ் ஸ்டேஷன் படியேறும் பெண்களின் நிலை பரிதாபமாக முடியும். டாஸ்மாக் கடையை பாதுகாக்க கேமரா வைக்கும் டாஸ்மாக் அரசு ஏன் ? போலீஸ் நிலையத்தில் CCTV வைக்கக்கூடாது. ?
Rate this:
Cancel
aryajaffna - Zurich,சுவிட்சர்லாந்து
24-ஜூன்-202002:20:37 IST Report Abuse
aryajaffna அமெரிக்காவில் ஒரு சிறுபான்மை இனத்தவர் கொல்லப்பட்ட்தால் அமெரிக்காவே பற்றி எரிந்தது , இங்கு 2 சிறுபான்மையினர் கொல்லபட்டுள்ளார்கள்,
Rate this:
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
24-ஜூன்-202002:01:37 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN குற்ற வாளிக்கு பரிந்து பேசும் துணை நிற்கும் இவர்கள்.... சட்டத்துக்கும் அரசு ஊழியர் கடமைக்கும் களங்கம் ஏற்படுத்துவது ஏன். நாட்டில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும் அப்போதான் கட்சி ஆரவாரம் அடியோடு ஒழியும். ஒரே நாடு ஒரே தலைமை என்ற நிலை அவசியம் தேவைதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X